18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » உசிலம்பட்டி அருகே கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி ஆதரவற்றோர் மாற்றுத்திறனாளிகளுக்கு உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி .

உசிலம்பட்டி அருகே கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி ஆதரவற்றோர் மாற்றுத்திறனாளிகளுக்கு உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி .

எழுதியவர்: mohan December 25, 2021, 4:47 pm

தமிழகம் முழுவதும் இன்று கிறிஸ்துமஸ் பெரு விழா வெகுசிறப்பாக கொண்டாடப்பட்டு வருகின்றது.இதன் ஒரு பகுதியாக மதுரை மாவட்டம் உசிரம்பட்டி அருகே மாதரையில் தேவ அக்கினி சபை சார்பில் கிறிஸ்துமஸ் விழா கொண்டாடப்பட்டது.முதலில் இயேசு கிறிஸ்துவின் போதனைகள் பொதுமக்களுக்கு விளக்கமாக எடுத்துரைக்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் சகோதரர் கருணாகரன் தலைமையேற்று போதனைகளை எடுத்துரைத்தார்.பின்னர் ஆதரவற்றோர் மாற்றுத்திறனாளிகள் மலைவாழ்மக்கள் மற்றும் கண்பார்வையோற்றோருக்கு அரிசி பருப்பு உள்ளிட்ட மளிகைச்சாமான்களும் புத்தாடைகளும் வழங்கப்பட்டது..இந்நிகழ்ச்சியில் சுமார் 500 மேற்ப்பட்டோர் பங்கேற்று உதவிகள் பெற்றுச் சென்றனர்.

உசிலை சிந்தனியா
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!