18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » இராஜபாளையம் சட்டமன்ற உறுப்பினர் மக்களை சந்திப்பு இயக்கம் என்ற பேரில் மக்களிடம் நேரடி சென்று குறைதீர்ப்பு முகாம்.

இராஜபாளையம் சட்டமன்ற உறுப்பினர் மக்களை சந்திப்பு இயக்கம் என்ற பேரில் மக்களிடம் நேரடி சென்று குறைதீர்ப்பு முகாம்.

எழுதியவர்: mohan December 25, 2021, 12:06 pm

விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் பகுதியில் பொதுமக்களை நேரில் சந்தித்து உடனடி தீர்வு கான மக்கள் சந்திப்பு இயக்கம் மூலம் சட்டமன்ற உறுப்பினர் தங்கபாண்டியன் . ஆர் ஆர் நகர். பொன்னகரம் . அழகிய நகர். பாரதி நகர் உள்ளிட்ட பகுதியில் முதல் கட்டமாக மக்களை சந்தித்து பொதுமக்கள் கோரிக்கை என்னவென்று கேட்டு அறிந்து.உடனடியாக தீர்வு காணும் வகையில் வட்டாட்சியர் நகராட்சி ஆணையாளர் உள்ளிட்ட அதிகாரிகளும் உடன் சென்று மக்களிடம் மனுக்களைப் பெற்று உடையாக தீர்க்கு விதமாக இந்த நிகழ்ச்சி நடைபெற்றது.இந்த நிகழ்ச்சியில் இராஜபாளையம் வட்டாட்சியர் ராமச்சந்திரன். கலந்துகொண்டு மக்கள் பிரச்சினை தீர்வு காண நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.சட்டமன்ற உறுப்பினர் தங்கபாண்டியனிடம் பொதுமக்கள் தங்கள் பகுதியில் வாறுகால் சரியாக இல்லாததால் மழை நீர் மற்றும் தேங்கியுள்ளது. கழிவுநீர் வெளியே செல்லாமல் நோய் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளது சாலை வசதிகள் செய்து தரவேண்டும் என பலகோரிக்களை முன் வைத்தனர்.நகராட்சி அலுவலகர்களிடம் உடனடியாக இந்த பகுதியில் கழிவுநீர் ஓடைகளை சுத்தம் செய்ய வேண்டும் என அறிவுரை வழங்கினார் .இரண்டு தினங்களில் சரி செய்யப்படும் என வாக்குறுதி அளித்தார் இதுபோன்ற ஏற்பாடு பொதுமக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது..

செய்தியாளர் வி காளமேகம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!