வேலூர் மாவட்டம் காட்பாடி சித்தூர் பஸ் நிலையம் அருகில் லட்சுமி பவன் எதிரில் முன்னாள் தமிழக முதல்வரும் அதிமுக நிறுவனருமான எம்ஜிஆரின் 42 -வது நினைவுநாள் முன்னிட்டு அவரது படத்திற்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தப்பட்டது.வேலூர் மாவட்ட அதிமுக மாநகர செயலாளர் எஸ்ஆர்கே அப்பு அலங்கரிக்கப்பட்டிருந்த எம்ஜிஆர் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.மாவட்ட அம்மா பேரவை இணை செயலாளர் கே.ஆர்.ரவி தலைமையில் காட்பாடி பகுதி செயலாளர் ஜனார்த்தனன், முன்னாள் தாராபடவேடு நகர செயலாளர் கே.ஆர்.பாபு, மாவட்ட அதிமுக மகளிரணி இணை செயலாளர் கே.ஆர்.லட்சுமிரவி, வேலூர் மாநகராட்சி 7-வது கழகவட்ட செயலாளர் பாண்டியன், அவைத்தலைவர் மனோகரன், இணை செயலாளர் கோவிந்தசாமி, மேலவை பிரதிநிதி சசிக்குமார், மாவட்ட அம்மா பேரவை இணை செயலாளர் ஜெயக்குமார், தகவல் நுட்பபிரிவு செயலாளர் சரவணன் உள்ளிட்ட ரத்தத்தின் ரத்தங்கள் கலந்துகொண்டனர்.
காட்பாடியில் எம்ஜிஆர் நினைவுநாள் .
எழுதியவர்: mohan December 24, 2021, 4:02 pm




You must be logged in to post a comment.