17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » வைகை ஆறு முழுவதும் தண்ணீர் ஓடினாலும் குடிக்கத் தண்ணீர் இல்லாமல் அல்லாடும் பொதுமக்கள்.

வைகை ஆறு முழுவதும் தண்ணீர் ஓடினாலும் குடிக்கத் தண்ணீர் இல்லாமல் அல்லாடும் பொதுமக்கள்.

எழுதியவர்: mohan December 24, 2021, 3:57 pm

மதுரை மாநகராட்சிக்கு உட்பட்ட திருநகர் 98 வது வார்டு ஓனா க்கள் 1 2 3 மூன்று தெருக்கள் உள்ளன இதில் சுமார் 300 குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றன அவர்களுக்கு மாநகராட்சி குடிநீர் லாரிகள் மூலமாக குடிநீர் வழங்கப்பட்டு வந்தது இந்த நிலையில் அப்பகுதியில் 22 நாட்களாக மேலாக குடிநீர் வரவில்லை.. என அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டுகின்றனர் மேலும் ஒரு குடம் 15 முதல் 20 ரூபாய் வரை விலை கொடுத்து குடிநீர் வாங்க வேண்டிய நிலை உள்ளது எனவும் அன்றாட கூலி வேலை பார்க்கும் நாங்கள் எப்படி ஒரு நாளைக்கு 100 முதல் 200 ரூபாய் குடிநீருக்காக செலவழிக்க முடியும் என வினா எழுப்புகின்றனர் ஆறு நிறைய தண்ணி போனாலும் கம்மாய் நிறைய இருந்தாலும் எங்களுக்கு ஒரு குடம் தண்ணீர் கூட கிடைக்கவில்லை என அப்பகுதி மக்கள் குற்றச்சாட்டு முன்வைக்கின்றனர் இதனால் எங்களுக்கு பொருளாதார பெரும் பாதிப்பு ஏற்பட்டு வருகிறது என குற்றச்சாட்டில் வைக்கின்றனர் தண்ணீர் வசதியும் இல்லாமல் இருக்கிறது இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகளிடம் பலமுறை சொல்லியும் ஒரு குடம் தண்ணீர் கூட கிடைக்கவில்லை என பொதுமக்கள் ஆதங்கப்படுகின்றனர் மாநகராட்சி ஆணையாளர் உடனடியாக அப்பகுதி மக்களுக்கு முறையான குடிநீர் வழங்க வழிவகை செய்ய வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர் மாநகராட்சி ஆணையாளர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அப்பகுதியில் எதிர்பார்ப்பாக உள்ளது..

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!