திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த இறையூர் அரசினர் மேல்நிலைப்பள்ளியில் பாரத சாரண சாரணியர் இயக்கத்தின் சார்பில் நடைபெற்ற இராஜ்யபுரஸ்கார் ( மாநில ஆளுநர் விருது)தேர்வு முகாமிற்கு மாவட்ட கல்வி அலுவலர் ராஜேந்திரன் தலைமை தாங்கினார். பள்ளி துணை ஆய்வாளர் முனைவர்.குணசேகரன், மாவட்ட தலைவர் மணி, சாரண ஆணையர் ராமதாஸ், சாரணிய ஆணையர் ஜெயகாந்தா, இறையூர் பள்ளித் தலைமை ஆசிரியர் சத்யா ஆகியோர் முன்னிலை
வகித்தனர் நிகழ்ச்சியின் முன்னதாக செங்கம் கல்வி மாவட்டத்தில் மாவட்ட செயலர் வெங்கடேஷ் அனைவரையும் வரவேற்று பேசினார் செங்கம் கல்வி மாவட்டத்திலிருந்து 20க்கும் மேற்பட்ட அரசு நடுநிலை, உயர்நிலை, மேல்நிலை பள்ளி மற்றும் தனியார் பள்ளியிலிருந்து இருந்து 200க்கும் மேற்பட்ட சாரண சாரணிய மாணவர்கள் தேர்வு முகாமில் பங்கேற்றனர் மாநில தேவராக லோகநாதன், ஜெயந்தி ஆகியோர் தேர்வை நடத்தினர். மாவட்ட கல்வி அலுவலர் ராஜேந்திரன் இராஜ்யபுரஸ்கார் தேர்வு முகாமினை பார்வையிட்டு பேசினார்.அவர் பேசுகையில்;குழந்தை பருவத்தில் இருந்தே கீழ்ப்படிதல், பெரியோரை மதித்து நடத்தல் போன்ற நற்பண்புகளை வளர்க்கும் இயக்கம் சாரணர் இயக்கம். பாரத சாரணர் இயக்கத்தில் மாணவர்கள் ஈடுபடுத்திக் கொண்டு வாழ்க்கையில் சாதிக்க வேண்டும்.இந்த இயக்கத்தின் மூலமாக சாரண, சாரணியர்களுக்குப் பல்வேறு வகையான பயிற்சிகள் கொடுக்கப்பட்டு வருகின்றது அவற்றில் தேர்ச்சி பெற்று ராஜ்ய புரஸ்கார் விருது மற்றும் ராஷ்டிரபதி விருது பெற்று நம் கல்வி மாவட்டத்திற்கு பெருமை சேர்க்கவேண்டும். அனைத்துப் பள்ளிகளிலும் பாரத சாரண இயக்கம் உருவாக்கப்பட வேண்டும் என்று பேசினார் .முகாம் ஏற்பாட்டினைசாரண அமைப்பு ஆணையர் அன்பழகன் பயிற்சி ஆணையர் பாலகுமார் ஆகியோர் செய்திருந்தனர். முகாமில் 20க்கும் மேற்பட்ட சாரண சாரணிய ஆசிரியர்கள் கலந்து கொண்டனர் நிகழ்ச்சியின் முடிவில் சாரணிய பயிற்சி ஆணையர் கோமதி நன்றி கூறினார்
சாரணர் இயக்கம் நற்பண்புகளை வளர்க்கும் ; மாவட்ட கல்வி அலுவலர் அறிவுரை
எழுதியவர்: mohan December 24, 2021, 10:06 am




You must be logged in to post a comment.