18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » இரவோடு இரவாக போடப்பட்ட தரமற்ற சார் சாலையால் பொதுமக்கள் அவதி சாலையை மறித்து பொதுமக்கள் போராட்டம்.

இரவோடு இரவாக போடப்பட்ட தரமற்ற சார் சாலையால் பொதுமக்கள் அவதி சாலையை மறித்து பொதுமக்கள் போராட்டம்.

எழுதியவர்: mohan December 24, 2021, 7:23 am

மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே முள்ளிப்பள்ளம் முதல் பேரனை வரை தார் சாலை அமைக்கப்பட்டு வருகிறது இந்நிலையில் முள்ளிப்பள்ளம் கிராமத்தில் குண்டும் குழியுமாக உள்ள சாலைகள் முறையாக செப்பனிட வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர் பொதுமக்களின் கோரிக்கைக்கு செவி சாய்க்காமல் நேற்று இரவோடு இரவாக ஏற்கனவே உள்ள சாலையின் மீது அப்படியே போடப்பட்டது இதனால் ரோடு பெயர்ந்து வாகனங்கள் கீழே விழும் அபாயம் ஏற்பட்டது நேற்று போட்ட ரோடு ஒரு நாள் கூட தாங்காமல் பெயர்வதால் பொதுமக்கள் மிகுந்த அதிர்ச்சி அடைந்தனர் எனவே பொதுமக்கள் சாலையில் ஒன்றுகூடி மீண்டும் தரமான சாலையை போடவேண்டும் அப்படி இல்லாத பட்சத்தில் மக்களை ஒன்று திரட்டி மிகப்பெரிய போராட்டத்தில் ஈடுபடப்போவதாக தெரிவித்தனர் மேலும் பொதுமக்கள் கூறுகையில் பிரசித்திப்பெற்ற குருவித்துறை குரு பகவான் கோவில் அருகில் உள்ளதால் வாகன வாகன போக்குவரத்து அதிகம் இருக்கும் என்றும் சாலையின் அருகிலேயே அரசு மேல்நிலைப்பள்ளி இருப்பதால் அடிக்கடி விபத்து ஏற்பட கூடிய வாய்ப்பு இருப்பதாகவும் ஆகையால் நெடுஞ்சாலைத் துறையினர் உடனடியாக தரமான சாலையை ஏற்படுத்தி தர வேண்டும் என்று இந்த பகுதி மக்கள் அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்..

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!