17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » மதுரையில் கொரோனா விதி முறைகளை கடைபிடிக்காத சரவணா செல்வரத்தினம் நிறுவனத்திற்கு வருவாய்த் துறையினர் அபராதம்.

மதுரையில் கொரோனா விதி முறைகளை கடைபிடிக்காத சரவணா செல்வரத்தினம் நிறுவனத்திற்கு வருவாய்த் துறையினர் அபராதம்.

எழுதியவர்: mohan December 24, 2021, 7:18 am

கொரோனா தொற்று பரவலை தடுக்க பல்வேறு தொடர் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.மதுரை பழங்காநத்தம் அருகே திருப்பரங்குன்றம் GST சாலையில் உள்ள சரவணா செல்வரத்தினம் நிறுவனத்தில், திருமங்கலம் கோட்டாட்சியர் அனிதா, வட்டாட்சியர் சரவணன்,வருவாய் ஆய்வாளர் ராமர் மற்றும் கிராம நிர்வாக அலுவலர் ஆகியோர் திடீரென ஆய்வு மேற்கொண்டனர்.அப்போது கொரோனா விதிமுறைகளை மீறி அந்நிறுவன ஊழியர்கள், வாடிக்கையாளர்கள் முகக் கவசம் அணியாமலும், தனி மனித இடைவெளி கடைபிடிக்கப்படாமலும் இருந்தனர். இதையடுத்து கோட்டாட்சியர் 5,000 ரூபாய் அபராதம் விதித்தார்…

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!