18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » வலையங்குளம் அரசு உயர்நிலைப் பள்ளிக்கு செல்ல நான்குவழிச் சாலையை கடக்க பொதுமக்கள் மாணவர்கள் அவதி.

வலையங்குளம் அரசு உயர்நிலைப் பள்ளிக்கு செல்ல நான்குவழிச் சாலையை கடக்க பொதுமக்கள் மாணவர்கள் அவதி.

எழுதியவர்: mohan December 23, 2021, 7:12 pm

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுகா அருகே உள்ள மலையன்குளம் ஊராட்சியில் உள்ளது ஊராட்சிக்கு கிழக்குப் பகுதியில் ஊராட்சி ஒன்றிய உயர் நிலைப்பள்ளி உள்ளது இங்கு பயிலும் மாணவர்கள் வலையங்குளம் வளையபட்டி, பாரபத்திபோன்ற சிற்றூர்களில் இருந்து சுமார் 500க்கும் மேற்பட்ட மாணவர்கள் படிக்கின்றனர் பெரும்பாலான மாணவர்கள் மதுரை தூத்துக்குடிநான்கு வழிச்சாலையை கடந்து பள்ளிக்கு செல்வதால் சாலை விபத்து ஏற்படுகிறது.ஏற்கனவே பள்ளி மாணவர்கள் 3 பேர் பொதுமக்கள் 2 பேர் என ஐந்து பேர் வலையங்குளம் சாலை விபத்தில் இறந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது தற்போதைய சூழ்நிலையில் காவல்துறை சார்பில் போக்குவரத்து காவலர் ஒருவரை அனுப்பி காலை 8 மணிமுதல் 10 மணிவரை மாலை 3 மணிமுதல் 5 மணிவரைமாணவர்கள் மற்றும் பொதுமக்கள் சாலையை கடக்கபணியில் இருக்க கோடி கோரிக்கை விடுக்கின்றனர் மேலும் இப்பகுதியில் மேம்பாலம் அல்லது தரைப் பாலம் அமைத்துக் கொடுத்தால் தங்களுக்கு வசதியாகவும் பாதுகாப்பாகவும் பயணம் செய்ய முடியும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!