17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » உசிலம்பட்டியில் திருக்குறள் ஒப்புவித்து கின்னஸ் சாதனை படைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

உசிலம்பட்டியில் திருக்குறள் ஒப்புவித்து கின்னஸ் சாதனை படைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

எழுதியவர்: mohan December 22, 2021, 7:18 pm

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி வண்ணாரப்பேட்டையிலுள்ள அரசு உதவி பெறும் பள்ளியான நாடார் சரஸ்வதி தொடக்கப் பள்ளியில் பள்ளிக்குழந்தைகள் 1330 திருக்குறளையும் ஒப்புவித்து கின்னஸ் சாதனை படைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் பள்ளி மாணவி வர்ஷா 4 நிமிடத்தில் 250 திருக்குறள்களையும் மாணவன் ரூபன் பிரசாத் 3 நிமிடத்தில் 200 திருக்குறள்களை ஒப்புவித்து கின்னஸ் சாதனை புரிந்தனர்.மேலும் 1 முதல் 5ம் வகுப்பு வரை உள்ள 133 மாணவ மாணவியர் 54நிமிடங்கள் 41விநாடிகளில் 1330 திருக்குறளை ஒப்புவித்து உலக சாதனை படைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இறுதியில் கின்னஸ் சாதனை படைத்த மாணவ மாணவியருக்கு டிரம்ப் கின்னஸ் அமைப்பின் சார்பில் பதக்கமும் சான்றிதழும் வழங்கப்பட்டது.கின்னஸ் சாதனை நிகழ்த்திய பள்ளி தலைமைஆசிரியர் மதன்பிரபுக்கு பதக்கம் வழங்கப்பட்;டது.இந்நிகழ்ச்சியில் பள்ளி ஆசிரியர்கள் பெற்றோர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

உசிலை சிந்தனியா
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!