17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » வேலூரில் செய்தியாளர்களை ஒருமையில் பேசிவந்த பிஆர்ஓ சுப்பையாகாத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்.

வேலூரில் செய்தியாளர்களை ஒருமையில் பேசிவந்த பிஆர்ஓ சுப்பையாகாத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்.

எழுதியவர்: mohan December 22, 2021, 7:08 pm

தமிழ்நாட்டில் ஆட்சிமாற்றம் ஏற்பட்டதும் வேலூர் மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலராக (பிஆர்ஓ)சுப்பையா நியமிக்கப்பட்டார்.இவர் வந்தபிறகு தமிழக அரசின் வேலூர் மாவட்ட செய்திகள் சரிவர வெளியிடுவது இல்லை. முறையான தகவல்கள் செய்தியாளர்களுக்கு கொடுப்பது இல்லை.செய்தியாளர்கள், அரசு அலுவலர்களை ஒருமையில் பேசுவது நான் டெபிடி கலெக்டர் ரேங்க்கில் உள்ளேன்என்னை யாரும் ஒன்றும் செய்ய முடியாது என்று பல்வேறு தரப்பினரிடம் பந்தா காட்டி வந்தார். கலெக்டர் பெயரை தவிர மற்ற அதிகாரிகளின் பெயரை செய்திகுறிப்பில் குறிப்பிடமாட்டார்.இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் குமாரவேலுவிடம் பல புகார்கள் அளிக்கப்பட்டது. இதனையெடுத்து வேலூர் பிஆர்ஓ சுப்பையாவை காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றி அதன் செயலாளர் மகேசன் உத்தரவிட்டார்.இங்கு செய்தி மக்கள் தொடர்பு உதவி அலுவராக இருக்கும் பரத்குமாரை பொறுப்பு பிஆர்ஓ வாக நியமிக்கப்பட்டுள்ளார்.திருவள்ளூவர் மாவட்டத்தை சேர்ந்த சுப்பையா ,நீக்கப்பட்ட முன்னாள் அதிமுக அமைச்சர் ரமணாவின் உறவினர் என்று குறிப்பிடத்தக்கது.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!