17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » திருநகரில் பட்டாக்கத்தியால் பிறந்தநாள் கேக் வெட்டி கொண்டாடிய விஜய் மக்கள் இயக்க மாவட்ட நிர்வாகி வீடியோ சமூக வலைதளங்களில் வைரல்.

திருநகரில் பட்டாக்கத்தியால் பிறந்தநாள் கேக் வெட்டி கொண்டாடிய விஜய் மக்கள் இயக்க மாவட்ட நிர்வாகி வீடியோ சமூக வலைதளங்களில் வைரல்.

எழுதியவர்: mohan December 22, 2021, 6:39 pm

 தமிழகத்தில் ஆயுத கலாசாரத்தை ஒழிக்க டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவின் பேரில் காவல்துறையினர் பல்வேறு நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.மதுரை திருநகர் பகுதியை சேர்ந்த விஜய் மக்கள் இயக்கத்தின் தெற்கு மாவட்ட நிர்வாகியாக உள்ள மருதுபாண்டி(வயது 31) என்பவர் தனது பிறந்தநாளை முன்னிட்டு நண்பர்களுடன் இணைந்து கொண்டாடிய போது அவருடைய நண்பர்கள் பித்தளையில் செய்யப்பட்ட நீளமான வாலை பரிசாக வழங்கி உள்ளனர்.அதனைத் தொடர்ந்து., தனது பிறந்த நாளை முன்னிட்டு மற்றொரு கத்தியை வைத்து விஜய் ரசிகர் மருதுபாண்டி நீளமான பட்டாக்கத்தியால் கேக்வெட்டி கொண்டாடியுள்ளார். இந்த காட்சிகளை அவருடைய நண்பர்கள் காட்சிகளாக பதிவிட்டு சமூகவலைதளங்களில் பதிவேற்றம் செய்துள்ளனர்.நீளமான பட்டா கத்தியை கொண்டு பிறந்தநாள் கேக் வெட்டிய காட்சிகள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகின்றது. தமிழகத்தில் ஆயுத கலாசாரத்தை ஒழிக்க டிஜிபி உத்தரவின்பேரில் காவல்துறையினர் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு பலரையும் கைது செய்தனர்.இது போன்ற பயங்கர ஆயுதங்கள் தயாரிக்கும் பட்டரைகள் முதல்., விற்பனை செய்யும் நபர்களை கண்டறிந்து காவல் துறையினர் கடுமையான சோதனைகளை மேற்கொண்டு தமிழகம் முழுவதும் பல நடவடிக்கைகள் எடுத்து வரும் நிலையில், பிறந்தநாள் விழாவை நண்பர்களுடன் சேர்ந்து கொண்டாடுவது அவருடைய விருப்பமாக இருந்தாலும்., சட்டம் ஒழுங்கு கேள்விக்குறியாக்கும் வகையில் பட்டாகத்தியை கொண்டு பிறந்தநாள் கேக்வெட்டி கொண்டாடிய காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாக வருவதை பார்க்கும் போது மதுரை மாநகரில் ஆயுத கலாச்சாரம் மீண்டும் தலை தூக்குகிறதோ என்ற அச்சம் மதுரை மக்களிடையே எழுந்துள்ளது.?

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!