17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » பேருந்து படிகட்டுகளில் தொங்கியபடி பள்ளி மாணவர்கள் பயணம்-போலீசாரை கண்டதும் மாணவர்கள் பேருந்துக்குள் தஞ்சமடைந்தனர்.

பேருந்து படிகட்டுகளில் தொங்கியபடி பள்ளி மாணவர்கள் பயணம்-போலீசாரை கண்டதும் மாணவர்கள் பேருந்துக்குள் தஞ்சமடைந்தனர்.

எழுதியவர்: mohan December 21, 2021, 11:07 am

மதுரை பேருந்து நிலையத்திலிருந்து கீழப்பட்டி வரை செல்லும் பேருந்து வழித்தடத்தில் எல்லீஸ்நகர் 70 அடி சாலையில் சென்று கொண்டிருந்த அரசு பேருந்தில் பள்ளி மாணவர்கள் பேருந்தின் படியில் தொங்கியபடி பயணம் செய்தனர்.அப்போது அங்கு பணியில் இருந்த போக்குவரத்து உதவி ஆய்வாளர் டேவிட் பேருந்தில் தொங்கிய மாணவர்களை கண்டதும் பேருந்தை நிறுத்தச் சொல்லி மாணவர்களை அடுத்த பேருந்தில் செல்லுங்கள் என்றதும்,இறங்க மறுத்த மாணவர்களை பேருந்தில் போதிய இடம் இருந்தபோதிலும் மாணவர்கள் படியில் தொங்கியதால் இதுகுறித்து பெற்றோர்கள் இடத்திலும் ஆசிரியர்களிடமும் புகார் தெரிவிக்கப்படும் என போலீசார் எச்சரிக்கை விடுத்ததை தொடர்ந்து மாணவர்கள் பேருந்துக்குள் தஞ்சமடைந்தனர். இதனை தொடர்ந்து பேருந்து பயணிகள் உதவி ஆய்வாளரின் செயலை வெகுவாக பாராட்டினார்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!