17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » குற்றால அருவிகளில் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து தென்காசி மாவட்ட எஸ்.பி ஆய்வு..

குற்றால அருவிகளில் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து தென்காசி மாவட்ட எஸ்.பி ஆய்வு..

எழுதியவர்: mohan December 21, 2021, 10:36 am

குற்றால அருவிகளில் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆய்வு மேற்கொண்டார். கொரோனா தொற்றின் காரணமாக 8 மாதங்களாக குற்றாலம் அருவிகளில் பொதுமக்கள் குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில் 20.12.2021 முதல் குற்றால அருவிகளில் பொதுமக்கள் குளிப்பதற்கு பல்வேறு கட்டுப்பாடுகளுடன் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பல்வேறு மாநிலங்கள் மற்றும் மாவட்டங்களில் இருந்து சுற்றுலா பயணிகள் குற்றாலத்திற்கு வருவதால் எந்த ஒரு அசம்பாவித செயல்களும் நடைபெறாத வண்ணம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கிருஷ்ணராஜ் IPS உத்தரவின் பேரில் சுற்றுலா பயணிகள் பாதுகாப்பான முறையில் வந்து செல்வதற்கு குற்றாலம் முழுவதும் அனைத்து அருவிகளிலும் காவல் துறையினர் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். காவல்துறையினரின் பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் விதிமுறைகள் முறையாக பின்பற்றப் படுகிறதா என்பது குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அனைத்து அருவிகளிலும் ஆய்வு மேற்கொண்டார்.

செய்தியாளர் அபுபக்கர்சித்திக்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!