18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » மதுரையில் விசாரணைக்குச் சென்ற பெண் காவலர்களை அருவாமனை வைத்து கொலை மிரட்டல் விடுத்த நபர்

மதுரையில் விசாரணைக்குச் சென்ற பெண் காவலர்களை அருவாமனை வைத்து கொலை மிரட்டல் விடுத்த நபர்

எழுதியவர்: mohan December 20, 2021, 7:53 pm

மதுரை செல்லூர் மீனாட்சிபுரம் பகுதியைச் சேர்ந்த பெருமாள். இவரது மனைவியுடன் ஏற்பட்ட குடும்ப தகராறு காரணமாக மதுரை தல்லாகுளம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் மனைவி புகார் அளித்தார்.புகாரின் பேரில் அனைத்து மகளிர் காவல் நிலைய பெண் காவலர்கள் சங்கீதா மற்றும் பொன்னுத்தாயி ஆகிய இருவரும் பெருமாள் என்பவரை விசாரணை செய்ய அவரது வீட்டிற்கு சென்றனர்.அப்போது பெருமாள் வீட்டிலிருந்த அருவாமனை யை எடுத்து கொண்டு விசாரணைக்கு சென்ற பெண் காவலர் சங்கீதா மற்றும் பொன்னுதாயி ஆகிய இருவரையும் வெட்டி விடுவதாக கொலை மிரட்டல் விடுத்தது மட்டுமன்றி அவதூராக பேசியுள்ளார்.இந்த காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்ற நிலையில், இது குறித்து பெண் காவலர் சங்கீதா அளித்த புகாரின் அடிப்படையில் மதுரை செல்லூர் போலீசார் பெருமாள் மீது வழக்குப்பதிவு செய்து தற்போது அவரை விசாரணை செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தனர்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!