18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » மதுரையில் மாநில அளவிலான கால்பந்து போட்டி: டிவிஎஸ் கால்பந்தாட்ட அணி சாம்பியன்

மதுரையில் மாநில அளவிலான கால்பந்து போட்டி: டிவிஎஸ் கால்பந்தாட்ட அணி சாம்பியன்

எழுதியவர்: mohan December 20, 2021, 7:45 pm

தொன்போஸ்கோ இளையோர் மன்றம் சார்பில் இளைஞர்கள் மற்றும் மூத்த விளையாட்டு வீரர்களுக்கான ஐவர் கால்பந்து போட்டி நடைபெற்றது.மதுரை கே.புதூர் பகுதியில் உள்ள தொன் போஸ்கோ விளையாட்டு மைதானத்தில் கடந்த 16 ம் தேதி ஐவர் கால்பந்து போட்டி தொடங்கி மூன்று நாட்கள் நடைபெற்றது.இந்த போட்டியில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த கால்பந்தாட்ட அணி கலந்து கொண்டது.குறிப்பாக மதுரை, திண்டுக்கல், திருச்சி, திருநெல்வேலி, திண்டுக்கல், திருச்சி, தூத்துக்குடி உள்ளிட்ட மாவட்டங்களில் 30க்கும் மேற்பட்ட அணிகள் பங்கேற்றனர்.இந்த கால்பந்தாட்ட போட்டியின் இறுதி ஆட்டம் இன்று நடைபெற்ற நிலையில், மதுரை டிவிஎஸ் கால்பந்தாட்ட அணி முதலிடத்தை பிடித்தனர். அந்த அணிக்கு 15 ஆயிரம் ரூபாய் மற்றும் சுழற்கோப்பை வழங்கினர்.இரண்டாவது இடத்தை பிடித்த தூத்துக்குடி கால்பந்தாட்ட அணிக்கு 10 ஆயிரம் ரூபாய் மற்றும் பரிசு கோப்பை வழங்கினர்.மூன்றாவது இடத்தை தொன்போஸ்கோ கால்பந்தாட்ட அணிக்கு 5 ஆயிரம் ரூபாய் மற்றும் பரிசு கோப்பை வழங்கினர்.தொடர்ந்து போட்டிகளில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய கோல்கீப்பர் மற்றும் நட்சத்திர வீரர், சிறந்த விளையாட்டு வீரர் ஆகியோருக்கு நினைவுப்பரிசுகளும் ரொக்கப்பரிசும் வழங்கப்பட்டது.இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக சேது பொறியியல் கல்லூரி சேர்மன் சீனிமுகம்மது, பங்கு தந்தை ஜான் கென்னடி,மரிய ஜோசப்,காவல் ஆய்வாளர் உதயகுமார் மற்றும் விளையாட்டு வீரர்கள் கலந்து கொண்டனர்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!