17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » மதுரை விளாச்சேரியில் ஆட்டோ டிரைவர் மின்சாரம் தாக்கி பலி; போலீசார் விசாரணை..

மதுரை விளாச்சேரியில் ஆட்டோ டிரைவர் மின்சாரம் தாக்கி பலி; போலீசார் விசாரணை..

எழுதியவர்: mohan December 19, 2021, 10:40 am

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுக்கா உட்பட்ட விளாச்சேரி பகுதியை சேர்ந்தவர் காதர் உசைன் மகன் ரசூல்தீன்(40). ஆட்டோ டிரைவராக வேலை செய்து வருகிறார் இவருக்கு திருமணமாகி சுல்தானா என்கிற மனைவியும், பிலால் என்கிற மகனும் கோரி பீவி என்ற மகளும் உள்ளனர்.இந்த நிலையில் ரசூழ்தீன் இன்று காலை வீட்டின் மாடியில் துண்டை எடுக்க சென்றபோது எதிர்பாராத விதமாக அருகில் சாய்த்து வைத்திருந்த கம்பி மேலே இருந்த மின்கம்பியில் உரசியபடி சாய்ந்திருந்த கம்பி கீழ் பாகம் ரசூழ்தீன் மீது விழுந்ததில் மின்சாரம் பாய்ந்தது.அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்த அவரது குடும்பத்தினர் மதுரை திருப்பரங்குன்றம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.இதுகுறித்து திருப்பரங்குன்றம் காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதையடுத்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!