தமிழகம் முழுவதும் கொரோனா தடுப்பு நடவடிக்கையில் தமிழக அரசு தீவிரமாக ஈடுபட்டு வருகின்றது.மதுரை மாவட்டத்தில் மாவட்ட நிர்வாகம் சார்பில் கொரோனா தடுப்பூசி செலுத்த பல்வேறு நடவடிக்கைகள் மேற்க்கொள்ளப்பட்டு வருகின்றது.இந்நிலையில் மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் சுகாதாரத் துறை சார்பில் நடமாடும் சிறப்பு கொரோனா தடுப்பூசி செலுத்தும் முகாம் நடைபெற்றது.இதன்படி சுகாதாரத்துறையினர் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களான பேரையூர் ரோடு தேனி ரோடு ஆகிய பகுதிகளில் நடமாடும் வேனில் அமர்ந்து அங்கு வரும் பொதுமக்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தினர்.பொதுமக்களும் ஆர்வத்துடன் பங்கேற்று கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டனர்.மேலும் உசிலம்பட்டி தேவர் சிலை வளாகத்தில் சுமைதூக்கும் தொழிலாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது.இதில் 100க்கும் மேற்ப்பட்ட சுமைதூக்கும் தொழிலாளர்கள் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டனர்..
உசிலம்பட்டி-சுகாதாரத்துறை சார்பில் சுமை தூக்கும் தொழிலாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி முகம்.
எழுதியவர்: mohan December 18, 2021, 12:51 pm




You must be logged in to post a comment.