17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » செங்கத்தில் மாற்றுத்திறனுடைய பள்ளி மாணவர்களுக்கு உதவி உபகரணங்கள் வழங்கும் விழா

செங்கத்தில் மாற்றுத்திறனுடைய பள்ளி மாணவர்களுக்கு உதவி உபகரணங்கள் வழங்கும் விழா

எழுதியவர்: mohan December 17, 2021, 5:34 pm

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம்  வட்டார வள மையத்தில் ஒருங்கிணைந்த பள்ளி கல்வி திட்டம் சார்பில் மாற்றுத்திறனுடைய மாணவர்களுக்கு உதவி உபகரணங்கள் வழங்கும் விழா மாவட்ட கல்வி அலுவலர் ராஜேந்திரன் தலைமையில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் முன்னதாக வட்டார வளமைய மேற்பார்வையாளர் முருகன் அனைவரும் வரவேற்று பேசினார் வட்டார கல்வி அலுவலர் மகேஸ்வரி மற்றும் கூடுதல் வட்டார கல்வி அலுவலர் சுப கோவிந்தராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். விழாவில் சிறப்பு விருந்தினராக மாவட்ட கல்வி அலுவலர் ராஜேந்திரன் கலந்து கொண்டு மாற்றுத்திறனுடைய பள்ளி மாணவர்களுக்கு ஒரு லட்சத்தில் மதிப்பிலான உதவி உபகரணங்கள் மூன்று சக்கர தள்ளு வண்டி, நடைவண்டி, மூளை முடக்குவாத நாற்காலி, சக்கர நாற்காலி, காதொலி கருவி, சக்கர நாற்காலி, காலிபர் கை ஊன்றுகோல் உள்ளிட்டவைகளை  வழங்கி சிறப்புரையாற்றினார் அவர் பேசுகையில்; அப்போது அவர் உபகரணத்தை கொண்டு மாணவர்கள் தொடர்ந்து பயிற்சி எடுத்து பயன்பெற வேண்டும் எனக் பேசினார் நிகழ்ச்சியின் முன்னதாக மாற்றுத்திறனுடைய பள்ளி மாணவர்களின் பராமரிப்பு பயிற்சி மையத்தை பார்வையிட்டு பள்ளி மாணவரை கலந்துரையாடினார் பின்னர் பொறுப்பாளர்களுக்கு ஆலோசனை மற்றும் அறிவுரை வழங்கினார். ஆசிரியர் பயிற்றுனர்கள் அன்புக்கரசி ஆரத்தி அண்ணாமலை சிறப்பாசிரியர்கள் பள்ளி மாணவர்களின் பெற்றோர்கள் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!