17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » தென்காசியில் எய்ட்ஸ் நோய் குறித்த கருத்தரங்கு;தலைமை மருத்துவமனை கண்காணிப்பாளர் தகவல்..

தென்காசியில் எய்ட்ஸ் நோய் குறித்த கருத்தரங்கு;தலைமை மருத்துவமனை கண்காணிப்பாளர் தகவல்..

எழுதியவர்: mohan December 15, 2021, 4:46 pm

தென்காசி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் எய்ட்ஸ் நோய் பற்றிய கருத்தரங்கு நடைபெற உள்ளதாக மருத்துவமனை கண்காணிப்பாளர் மருத்துவர் ஜெஸ்லின் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறியுள்ளதாவது: எய்ட்ஸ் நோய் பற்றிய கருத்தரங்கு வருகின்ற 17-12-2021 வெள்ளிக் கிழமை காலை 9 மணிக்கு தொடங்கி மாலை 5 மணி வரை நடைபெற உள்ளது. இதில் சிறப்பு விருந்தினர்களாக இணை இயக்குனர் நலப்பணிகள் மருத்துவர் வெங்கட்டரங்கன், அரசு டாக்டர்கள் சங்க திருநெல்வேலி மாவட்ட தலைவர் மருத்துவர் பேராசிரியர் முஹம்மது ராஃபி, அரசு டாக்டர்கள் சங்க திருநெல்வேலி மாவட்ட செயலாளர் மருத்துவர் குமார முருகன், அரசு டாக்டர்கள் சங்க தென்காசி மாவட்ட செயலாளர் மருத்துவர் செந்தில் சேகர், தென்காசி மாவட்ட பொருளாளர் மருத்துவர் ராஜேஷ் கண்ணா, தென்காசி மாவட்ட செயலாளர்(Dph) மருத்துவர் முஹம்மது இப்ராஹிம் ஆகியோர் கலந்து கொள்கின்றனர். கருத்தரங்கை தென்காசி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையும், தமிழ்நாடு அரசு டாக்டர்கள் சங்கமும் இணைந்து நடத்துகிறது. எனவே அரசு மருத்துவமனை மருத்துவர்கள்,ஆரம்ப சுகாதார நிலைய இந்திய மருத்துவ சங்க மருத்துவர்கள் மற்றும் தென்காசி மாவட்டத்தில் உள்ள அனைத்து மருத்துவர்களும் கலந்து கொண்டு கருத்தரங்கை சிறப்பிக்குமாறு அரசு தலைமை மருத்துவமனை கண்காணிப்பாளர் மரு.ஜெஸ்லின் கேட்டுக் கொண்டுள்ளார்.

செய்தியாளர் அபுபக்கர்சித்திக்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!