17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » இராஜபாளையம்-பொதுமக்களுக்கு நிவாரண பொருட்களை சட்டமன்ற உறுப்பினர் வழங்கினார்

இராஜபாளையம்-பொதுமக்களுக்கு நிவாரண பொருட்களை சட்டமன்ற உறுப்பினர் வழங்கினார்

எழுதியவர்: mohan December 15, 2021, 10:52 am

விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் நகர் மற்றும் கிராம பகுதிகளில் பருவ மழையின் போது வீடுகள் இடிந்து மற்றும் மேற்கூரைகள் இடிந்து சேதமடைந்தது என வட்டாச்சியர்க்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.. இதை அடுத்து வட்டாச்சியர் தலைமையில் வருவாய்துறையினர் பாதிக்கப்பட்ட இடந்தை பார்வையிட்டனர்.120 க்கும் மேற்பட்ட வீடுகள் பாதிக்கப்பட்டு இருந்த நிலையில் ‘பாதிக்கப்பட்ட பொதுமக்களை இராஜபாளையம் சட்டமன்ற உறுப்பினர் தங்கபாண்டியன் மற்றும் வட்டாட்சியர் ராமச்சந்திரன் நேரில் பார்வையிட்டனர் .பாதிக்கப்பட்டவர்களுக்கு ஒவ்வொருவருக்கும் முதற்கட்டமாக அரிசி பருப்பு போர்வை பாய் மற்றும் தலா 4 ஆயிரம் ரூபாய் வீதம் நிவாரண உதவிகளை இராஜபாளையம் சட்டமன்ற உறுப்பினர் தங்கபாண்டியன் வழங்குவதற்கு முன் வந்து அவருடைய சொந்த பணத்தில் மூன்று லட்ச ரூபாய் மற்றும் நிவாரணப் பொருட்களை 50க்கும் மேற்பட்ட நபர்களுக்கு வழங்கினார் இந்த நிகழ்ச்சியில் திமுக நகர செயலாளர் ராமமூர்த்தி மற்றும் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்..

செய்தியாளர் வி காளமேகம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!