18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » பொதுமக்களிடமிருந்து பெறப்படும் மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை : ஆணையாளர்

பொதுமக்களிடமிருந்து பெறப்படும் மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை : ஆணையாளர்

எழுதியவர்: mohan December 15, 2021, 10:46 am

மதுரை மாநகராட்சி மண்டலம் எண்.2 அலுவலகத்தில் பொது மக்கள் குறைதீர்க்கும் முகாம் ஆணையாளர் மரு.கா.ப.கார்த்திகேயன், தலைமையில் இன்று நடைபெற்றது.மதுரை மாநகராட்சி மண்டலம் எண்.2 அலுவலகத்தில் காலை 10.00 மணி முதல் 12.30 மணி வரை நடைபெற்ற பொது மக்கள் குறைதீர்க்கும் முகாமில், வீட்டு வரி, சொத்து வரி பெயர் மாற்றம், புதிய சொத்து வரி விதிப்பு, தொழில் வரி, குடிநீர், பாதாள சாக்கடை சாலை வசதி, தெருவிளக்கு வசதி உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் சம்பந்தமாக 149 மனுக்கள் பொதுமக்களிடம் இருந்து ஆணையாளர் அவர்களால் நேரடியாக பெறப்பட்டது.பொது மக்களிடம் இருந்து பெறப்பட்ட மனுக்கள் மீது ஒவ்வொன்றையும் கணிப்பொறியில் முறையாக பதிவு செய்து பெறப்பட்ட மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்குமாறும் கூறினார்.சென்ற குறைதீர்க்கும் முகாமில் பெறப்பட்ட 103 மனுக்களில் 85 மனுக்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார். தொடர்ந்து, மீதமுள்ள மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என சம்பந்தப்பட்ட அலுவலருக்கு உத்தரவிட்டார்.இம்முகாமில், உதவி ஆணையாளர்அமிர்தலிங்கம், உதவி செயற்பொறியாளர் (திட்டம்)சுப்புதாய், மக்கள் தொடர்பு அலுவலர்மகேஸ்வரன், உதவி செயற்பொறியாளர்சேகர், சுகாதார அலுவலர் வீரன் உட்பட மாநகராட்சி அலுவலர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!