18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » வளையங்குளத்தில் 140 கிலோ எடையுள்ள தடைசெய்யப்பட்ட புகையிலை மற்றும் போதை பொருட்கள் பறிமுதல்.

வளையங்குளத்தில் 140 கிலோ எடையுள்ள தடைசெய்யப்பட்ட புகையிலை மற்றும் போதை பொருட்கள் பறிமுதல்.

எழுதியவர்: mohan December 15, 2021, 10:07 am

பெருங்குடி போலீஸார் வழக்குபதிவு செய்து வாலிபரிடம் விசாரணை.மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுகா வலையங்குளம் பகுதியில் தடைசெய்யப்பட்ட புகையிலை மற்றும் போதைப் பொருட்கள் விற்பதாக போலீசாருக்கு வந்த ரகசிய தகவலையடுத்து பெருங்குடி போலீசார் சோதனையில் ஈடுபட்டு வந்தனர். |அப்பொழுது வலையங்குளம் ஸ்ரீராம் நகர் அருகே ஒரு வீட்டில் போதைப்பொருள் பதுக்கி வைத்திருந்த இடத்தை போலீசார் நடத்திய அதிரடி சோதனையில் சுமார் ஒரு லட்சம் ரூபாய் மதிப்பில் உள்ள 140 கிலோ எடையுள்ள புகையிலை பொருட்கள் பான்பராக் உள்ளிட்ட போதைப் பொருட்கள் மூடை முடையாக கைப்பற்றப்பட்டதுபெருங்குடி போலீஸாரின் முதல் கட்ட விசாரணையில்.வலையன்குளம் ஸ்ரீராம் நகரைச் சேர்ந்த போஸ் என்பவரது மகன் மாரிச்சாமி (வயது 27) என தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து வீட்டில் பதுக்கிவைக்கப்பட்ட ரூபாய் 1 லட்சம் மதிப்புள்ள 140 கிலோ போதை பொருட்களை கைப்பற்றி விசாரணை செய்து வருகின்றனர்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!