செங்கம் அடுத்த உச்சிமலைகுப்பம் கிராமத்தில் அனைத்து தரப்பு சமுதாய மக்கள் அதிகம் வசித்து வரும் பகுதியாகும். இப்பகுதியில் வசிக்கும் மாணவர்கள் அரசு பள்ளியில் சேர்ந்து கல்வி பயில வேண்டும் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கில் கல்வித் துறை நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது இந்நிலையில் தமிழக அரசின் வீடு தேடி கல்வி திட்டம் சார்பாக இப்பகுதியில் கலைநிகழ்ச்சி நடத்தி விழிப்புணர்வு ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதன்படி உச்சிமலை குப்பம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி வளாகத்தில் வீடு தேடி கல்வி திட்டம் குறித்த விழிப்புணர்வு கலைநிகழ்ச்சி நடைபெற்றது. ஆடல் பாடல் மற்றும் விழிப்புணர்வு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. நிகழ்ச்சியில் பள்ளித் தலைமையாசிரியர் பழனியம்மாள் அனைவரையும் வரவேற்றார். ஊராட்சி மன்ற தலைவர் கௌசல்யா ரவி, துணைத் தலைவர் சசிகலா பழனி கட்சி முக்கிய பிரமுகர்கள் ஆசிரியர் பயிற்றுனர் அண்ணாமலை, பள்ளி ஆசிரியர்கள் காசி, அனிதா ரூபாவதி ரேச்சல், சுரேஷ், சரவணன், ஷாலினி, நந்தகுமார், அருள், ஏழுமலை கிராம பொதுமக்கள், பள்ளி மாணவர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்
உச்சிமலைகுப்பம் அரசுப்பள்ளியில் இல்லம் தேடி கல்வி திட்ட விழிப்புணர்வு கலைநிகழ்ச்சி.
எழுதியவர்: mohan December 15, 2021, 9:52 am




You must be logged in to post a comment.