18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » செங்கத்தில் தேசிய குழந்தை நல  திட்டத்தின் கீழ்  பள்ளி மாணவர்களுக்கு பரிசோதனை.

செங்கத்தில் தேசிய குழந்தை நல  திட்டத்தின் கீழ்  பள்ளி மாணவர்களுக்கு பரிசோதனை.

எழுதியவர்: mohan December 15, 2021, 6:02 am

திருவண்ணாமலை துணை இயக்குனர் சுகாதாரப்பணிகள் செல்வகுமார் உத்தரவின்பேரில் செங்கம் வட்டார மருத்துவ அலுவலர் சுரேஷ் மேற்பார்வையில் மத்திய அரசின் தேசிய குழந்தைகள் நலத் திட்டத்தின் கீழ் பள்ளி மாணவர்களுக்கு குழந்தைப் பருவ நோய்கள் மற்றும் ஊனத்தின் உள்ளடக்கிய குறைபாடுகள் அவற்றை ஆரம்பத்திலேயே கண்டறிந்து சிகிச்சை அளித்து வருகின்றனர்.செங்கம் ஒன்றியத்தில் உள்ள நடுநிலை  உயர்நிலை, மேல்நிலை, என அனைத்து அரசு பள்ளிகளும் பள்ளி மாணவர்களுக்கு பரிசோதனை நடத்தப்பட்டு வருகின்றன. குறைபாடுகள் உள்ள பள்ளி மாணவி மாணவர் மாணவர்களுக்கு திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக அனுப்பி சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதன்படி செங்கம் அடுத்த மேல் பெண்ணாத்தூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் அனைத்து மாணவ மாணவிகளுக்கு மருத்துவ அலுவலர் அருள் நாராயணதாஸ் முன்னிலையில் கண் காது தோல் இருதயம் மற்றும் பல் மூக்கு ஆகிய 38 விதமான பரிசோதனைகள்  மேற்கொள்ளப்பட்டது. நிகழ்வின்போது பள்ளி தலைமையாசிரியர் ஜெயந்தி, மருந்தாளர் அப்துல் வாகித், செவிலியர் கார்த்தி பள்ளி ஆசிரியர்கள் வேல்முருகன், சங்கீதா, தனலட்சுமி, நாராயணன், அரசு ,மகேஸ்வரி மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டனர்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!