17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » நேர்மையாக செயல்பட்ட அதிகாரியின் பணிமாற்றத்தைக் கண்டித்து கிராமமக்கள் உசிலம்பட்டி கோட்டாச்சியர் அலுவலகத்தை முற்றுகை.

நேர்மையாக செயல்பட்ட அதிகாரியின் பணிமாற்றத்தைக் கண்டித்து கிராமமக்கள் உசிலம்பட்டி கோட்டாச்சியர் அலுவலகத்தை முற்றுகை.

எழுதியவர்: mohan December 14, 2021, 1:29 pm

மதுரை மாவட்டம் எழுமலை அருகே தாடையம்பட்டி கிராமத்தின் கிராமநிர்வாக அலுவலராக பணியாற்றி வருபவர் கருப்பையா.இவர் கிராமமக்களிடம் பணம் வாங்காமல் நேர்மையாகவும் அன்பாகவும் பணிபுரிந்ததாகத் தெரிகிறது.இந்நிலையில் கருப்பையாவை பேரையூர் அருகே வேளாம்பூர் கிராமத்திற்கு உசிலம்பட்டி கோட்டாச்சியர் இடமாற்றம் செய்துள்ளார்.இந்நிலையில் நேர்மையாக பணியாற்றிய அதிகாரி இடமாற்றத்தைகக் கண்டித்தும் அவரை மீண்டும் தாடையம்பட்டி கிராமத்தில் பணி அமர்த்தக் கோரியும் உசிலம்பட்டி கோட்டாச்சியர் தாடையம்பட்டி பஞ்சாயத்தைச் சேர்ந்த 7 கிராம மக்கள் உசிலம்பட்டி கோட்டாச்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.சம்பவமறிந்த அதிகாரிகள் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி நடவடிக்கை எடுப்பதாகக் கூறி கலைந்து போகச் செய்தனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

உசிலை சிந்தனியா
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!