திருவண்ணாமலை மாவட்ட அளவிலான பள்ளி மாணவர்களுக்கான கேரம் போட்டிகள் நடைபெற்றன. இதில், மாவட்டத்திலுள்ள பல்வேறு பள்ளி மாணவர்கள் பங்கேற்றனர் இதில் செங்கம் அடுத்த மேல்வணக்கம்பாடி ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளி மாணவி கார்த்திகா இரண்டாம் இடத்தையும் மற்றும் மாணவர் சீனிவாசன் மூன்றாம் இடத்தில் வெற்றி பெற்றார்கள். போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு மாவட்ட தடகள சங்க தலைவர் எ.வ.வே.கம்பன் மற்றும் சீனி.கார்த்திகேயன் ஆகியோர் பரிசுகள் சான்றிதழ் வழங்கி பாராட்டினார்.அரசு பள்ளி மாணவர்கள் மாவட்ட அளவில் கேரம் போட்டியில் வெற்றி பெற்று மாநில போட்டிக்கு தகுதி பெற்றதையடுத்து ஊராட்சி ஒன்றிய பள்ளி பள்ளி தலைமையாசிரியர் அன்பழகன் ஆசிரியர்கள் உடற்கல்வி ஆசிரியர் பாலகுமார் உள்ளிட்டோர் பள்ளிக்கு பெருமை சேர்த்த மாணவர்களை பாராட்டி பரிசுகள் வழங்கினர்
மாநில கேரம் போட்டிக்குத் தகுதிஅரசுப் பள்ளி மாணவர்களுக்கு பாராட்டு.
எழுதியவர்: mohan December 13, 2021, 4:12 pm




You must be logged in to post a comment.