18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » மாடக்குளம் பிரதான சாலையில் சேரும் சகதியுமாக உள்ள பகுதியில் திடீரென நாற்று நடும் போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள்.

மாடக்குளம் பிரதான சாலையில் சேரும் சகதியுமாக உள்ள பகுதியில் திடீரென நாற்று நடும் போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள்.

எழுதியவர்: mohan December 10, 2021, 6:23 am

மதுரை மாவட்டம் மேற்கு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட மாடக்குளம் பிரதான சாலையான அக்ரஹாரம் செல்லும் பகுதியில் 100க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.இதனிடையே,மதுரையில் கடந்த சில நாட்களாகப் பெய்த கனமழையால் குண்டும் குழியுமாக இருந்த சாலைகள் சேறும் சகதியுமாக மோசமான நிலையை எட்டியுள்ளது.இதனால் வாகன ஒட்டிகளுக்கும், பாதசாரிகளுக்கும் மிகுந்த சிரமத்தை ஏற்படுத்த வந்ததாக புகார் எழுந்துள்ளது.இந்தநிலையில் ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் சார்பில் மாடக்குளம் மற்றும் அக்ரஹாரம் பகுதியைச் சேர்ந்த 50க்கும் மேற்பட்ட பெண்கள்,அப்பகுதி குடியிருப்புவாசிகளுடன் சேறும் சகதியுமாக இருந்த சாலையில் இன்று நாற்று நடும் போராட்டத்தில் ஈடுபட்டனர். குண்டும் குழியுமாக உள்ள சாலைகளை உடனடியாக நகராட்சி நிர்வாகம் சரி செய்து தர வேண்டும் என கோரிக்கை விடுத்த்தனர் இந்நிகழ்வில் ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் மற்றும் பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!