வேலூர் மாவட்டம் லத்தேரி அருகே உள்ள பனமடங்கி ஊராட்சிக்கு உட்பட்ட கேசவாபுரம் கிராமத்தை சேர்ந்தவர் அருண்குமார் (29) இவரது மனைவி ஸ்ரீதேவி (22) நேற்று மாலை சுமார் 7 மணி அளவில் மலம் கழிப்பதற்காக வீட்டின் அருகே உள்ள மாந்தோப்பில் சென்றதாக தெரிகிறது அப்பொழுது பாம்பு கொத்தி உள்ளது. உடனே கூச்சல் போட்டு உள்ளார் உடனே அங்கிருந்தவர்கள் மயங்கி விழுந்த ஸ்ரீதேவியை லத்தேரி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர் அங்கு முதலுதவி கொடுத்த செவிலியர்கள் உடனடியாக குடியாதம் அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். நீண்ட நேரமாக ஆம்புலன்ஸ் வராமல் போனதால் ஆட்டோ மூலம் ஸ்ரீதேவி ஏற்றி குடியாத்தம் அரசு மருத்துவமனைக்கு சென்றுள்ளனர் அங்கு பரிசோதனை செய்த மருத்துவர் கொடிய விஷப் பாம்பு கடித்ததில் வரும் வழியிலேயே இறந்துவிட்டதாக தகவல் தெரிவித்துள்ளார்.தகவல் அறிந்த பணமடங்கி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்
லத்தேரி அருகே விஷப்பாம்பு கடித்து இளம்பெண் பலி.
எழுதியவர்: mohan December 9, 2021, 3:24 pm




You must be logged in to post a comment.