18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » மதுரை அருகே கிராம மக்கள் சாலை மறியல்: போக்குவரத்து பாதிப்பு.

மதுரை அருகே கிராம மக்கள் சாலை மறியல்: போக்குவரத்து பாதிப்பு.

எழுதியவர்: mohan December 4, 2021, 2:20 pm

மதுரை அருகே கருப்பாயூரணியில், பலத்த மழையால், வீடுகளுக்கு தண்ணீர் புகுந்ததைக் அகற்றக்கோரி கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.மதுரை கிழக்கு ஊராட்சி ஒன்றியம், கருப்பாயூரணி, ஒடைப்பட்டி, ஒத்தப்பட்டி, திடியனூர் ஆகிய பகுதிகளில் பலத்த மழையால், கால்வாயில் மழைநீர் பெருக்கெடுத்தது.மழை தொடர்ந்து பெய்து வருவதால், மதுரை சிவகங்கை சாலையில் ஆங்காங்கே மழைநீர் தேங்கி குளம் போல காட்சியளிக்கிறது.பல கிராமங்களில், மழைநீர் செல்ல வழியில்லாமல், குடியிருப்புகளில் உள்ளே புகுந்துள்ளது.கருப்பாயூரணியில் பகுதிகளில், உள்ள வீடுகளில் சூழ்ந்த மழைநீரை அகற்ற வலியூறுத்தி கிராம மக்கள், மதுரை- சிவகங்கை சாலையில் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர்.இதனால், மதுரை- சிவகங்கை சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!