17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » செங்கம் அருகே அரசு பள்ளிக்கு நலத்திட்ட உதவிகள் ஊராட்சி மன்ற தலைவர் வழங்கினார்.

செங்கம் அருகே அரசு பள்ளிக்கு நலத்திட்ட உதவிகள் ஊராட்சி மன்ற தலைவர் வழங்கினார்.

எழுதியவர்: mohan December 4, 2021, 1:59 pm

திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் அடுத்த மேல்பெண்ணாத்தூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் ஊராட்சி மன்ற தலைவர் விஜய் நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.மேல்பெண்ணாத்தூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் ஊராட்சி நிர்வாகம் சார்பில் பள்ளி மாணவர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது. பள்ளி மாணவர்கள் பாதுகாப்பு நலன் கருதி ரூ. 10000/-  மதிப்பிலான பள்ளி மாணவர்களுக்கு தேவையான குடிநீர் கேன்,  பாய் போன்ற நலத்திட்ட உதவிகளை ஊராட்சி மன்ற தலைவர் விஜய் மற்றும் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் விசாலாட்சி வெங்கடேசன் ஆகியோர் வழங்கி பள்ளி மாணவருக்கு அறிவுரை வழங்கினர் நிகழ்ச்சியின் முன்னதாக பள்ளி தலைமையாசிரியர் ஜெயந்தி அனைவரையும் வரவேற்று பேசினார் .  மேலும்  , செங்கம் ஒன்றிய அளவில் நடைபெற்ற திறனாய்வு தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு ஊராட்சி மன்ற தலைவர் விஜய் பாராட்டி பரிசுகள் வழங்கினார்.நிகழ்வின்போது வார்டு உறுப்பினர்கள், பள்ளி ஆசிரியர்கள் வேல்முருகன், சங்கீதா, தனலட்சுமி, நாராயணன், அரசு, மகேஸ்வரி, மாணவர்கள் கலந்து கொண்டனர் .

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!