திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அருகே அரட்டவாடி வாம் தொண்டு நிறுவனத்தில் உள்ள பள்ளி குழந்தைகளுக்கு பெண்களுக்கு எதிரான குற்றங்கள் சம்பந்தமாக விழிப்புணர்வு நிகழ்வு நடைபெற்றது நிகழ்ச்சிக்கு செங்கம் அனைத்து மகளிர் காவல் நிலைய காவல் ஆய்வாளர் கோமதி தலைமை தாங்கினார். வாம் தொண்டு நிறுவன இயக்குனர் ராஜவேலு அனைவரையும் வரவேற்று பேசினார். காவல் ஆய்வாளர் கோமதி பேசுகையில் பெண் குழந்தைகளுக்கு சமூக விரோதிகளால் ஏற்படும் அவலநிலை குறித்தும் அதிலிருந்து எவ்வாறு பாதுகாத்துக் கொள்வது பற்றியும் பள்ளி குழந்தைகளுக்கு தெளிவாக விழிப்புணர்வு ஏற்படுத்தினார் .மேலும்அவசர மற்றும் ஆபத்து நேரங்களில் குழந்தைகள் 1098, 100 போன்ற இலவச எண்களை எவ்வாறு தொடர்பு கொள்வது, உடனடியாக தொடர்பு கொள்வது குறித்து ஆலோசனைகளை வழங்கினர். தலைமை காவலர் சுமதி மற்றும் ஆசிரியர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
செங்கத்தில் பள்ளி குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் குறித்த விழிப்புணர்வு முகாம்.
எழுதியவர்: mohan December 3, 2021, 4:24 pm




You must be logged in to post a comment.