17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » மதுரை பெரியார் பஸ்நிலையத்தில் வியாபாரம் செய்ய அனுமதிக்க வேண்டும்: சாலையோர வியாபாரிகள் மனு.

மதுரை பெரியார் பஸ்நிலையத்தில் வியாபாரம் செய்ய அனுமதிக்க வேண்டும்: சாலையோர வியாபாரிகள் மனு.

எழுதியவர்: mohan December 2, 2021, 6:54 am

மதுரை பெரியார் பஸ்நிலையத்தில், புதுப்பிக்கப்பட்ட பஸ்நிலையம், திறக்கப்பட்டதும், சாலையோர வியாபாரிகளை அனுமதிக்க வேண்டும் என, மதுரை பெரியார் பஸ்நிலைய அண்ணா வியாபாரிகள் மற்றும் சாலையோர வியாபாரிகள் சங்கத்தினர், மதுரை மாவட்ட ஆட்சியர், மாநகராட்சி ஆணையாளரிடம் மனு அளித்தனர்.அந்த மனுவில் கூறியுள்ளதாவது:மதுரை பெரியார் பஸ்நிலையத்தில், கடந்த 40 ஆண்டுகளாக பழ வியாபாரம் செய்து வருவதாகவும், இது எங்களுடைய வாழ்வதாரம் ஆகும்.மேலும், தலைசுமையாக வியாபாரம் செய்வதால், எவ்வித இடையூறும் ஏற்படாது எனக் குறிப்பிட்டுள்ளனர்.இந்த மனுவை சங்க நிர்வாகிகளான,ஆர். வேலாயுதம், சுரேஷ், செல்வராஜ் மற்றும் 50-க்கு மேற்பட்டோர் மனுவில் கையெழுத்திட்டு, மதுரை மாநகராட்சி ஆணையாளர் டாக்டர் கார்த்திகேயனிடம் வழங்கினர்

. செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!