17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » இலவச பொது மருத்துவ முகாம் அமைச்சர் மூர்த்தி தொடங்கி வைத்தார்.

இலவச பொது மருத்துவ முகாம் அமைச்சர் மூர்த்தி தொடங்கி வைத்தார்.

எழுதியவர்: mohan November 30, 2021, 6:45 am

மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே, மதுரை மேற்கு ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட வெளிச்ச நத்தம் கிராமத்தில்,சத்யசாயி சேவா சமிதி சார்பில் கிராம தத்தெடுப்பு மற்றும் இலவச பொது மருத்துவ முகாம் நடைபெற்றது.இந்த நிகழ்ச்சியில், பத்திரப்பதிவு மற்றும் வணிகவரித் துறை அமைச்சர் மூர்த்தி கலந்துகொண்டு மருத்துவ முகாமை தொடங்கி வைத்தார்.இந்த அமைப்பு மூலம் கிராமத்தை தத்தெடுத்து இந்த கிராமத்திலுள்ள அனைத்து பொது மக்களுக்கும் தேவையான இலவச மருத்துவ மற்றும் பொது சுகாதார வசதிகளைசெய்து கொடுக்க உள்ளதாக சேவா சமிதி அமைப்பு நிர்வாகிகள் தெரிவித்தனர்.இந்த நிகழ்ச்சியில், ஊராட்சி ஒன்றியத் தலைவர் வீரராகவன், ஒன்றியச் செயலாளர் சிறை செல்வம் ,மாவட்ட கவுன்சிலர் நேரு பாண்டியன், முன்னாள் யூனியன் துணை சேர்மன் சுரேந்திரன், முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் சீமைச் சாமி, சத்திய சாயி சேவா நிறுவன மாவட்டத் தலைவர் நாராயணசுவாமி,மற்றும் ஊராட்சி மன்றத் தலைவர் வேலம்மாள்.துணைத் தலைவர் பபிதா உள்ளிட்ட பலர் இதில் கலந்து கொண்டனர்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!