17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » மதுரையில் மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த தந்தைக்கு ஆயுள் தண்டனை.

மதுரையில் மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த தந்தைக்கு ஆயுள் தண்டனை.

எழுதியவர்: mohan November 29, 2021, 5:38 pm

மதுரை அருகே மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த தந்தைக்கு ஆயுள் தண்டனை விதித்து போக்சோ நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.மதுரை ஒத்தக்கடை பகுதியைச் சேர்ந்த கணேசமூர்த்தி . இவர் கடந்த 2015 ஆண்டு தன்னுடைய 12 வயது மகளை பாலியல் தொல்லை கொடுத்ததாக மதுரை மாவட்ட போஸ்கோ சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு நடந்தது. இந்த வழக்கில் தற்போது நீதிபதி ராதிகா குற்றவாளியான தந்தைக்கு ஆயுள் தண்டனையும் 5 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து உத்தரவிட்டுள்ளார். இதனையடுத்து குற்றவாளி கணேசமூர்த்தியை போலீசார் கைது செய்து மதுரை மத்திய சிறையில் அடைத்தனர்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!