18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » கொட்டும் மழையில் மாநில ஆளுநர் விருதுக்கான தேர்வு ; சாரண சாரணியர்கள் பங்கேற்பு.

கொட்டும் மழையில் மாநில ஆளுநர் விருதுக்கான தேர்வு ; சாரண சாரணியர்கள் பங்கேற்பு.

எழுதியவர்: mohan November 29, 2021, 5:23 pm

திருவண்ணாமலை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அருள்செல்வன் அறிவுரை மற்றும் ஆலோசனையின் பேரில் திருவண்ணாமலை எஸ்.ஆர்.ஜி.டி.எஸ் நர்சரி பள்ளியில் பாரத சாரண சாரணியர் இயக்கத்தின் சார்பில்  ( இராஜ்யபுரஸ்கார்)மாநில ஆளுநர்  விருதுக்கான தேர்வு  நடைபெற்றது. திருவண்ணாமலை ஒன்றியத்திற்குட்பட்ட அனைத்துவகை அரசுப் பள்ளி, அரசு உதவி பெறும் பள்ளி, தனியார் பள்ளி சார்ந்த 54 சாரண மாணவர்கள் , 80 சாரணிய மாணவியர்களும் மாநில ஆளுனர் விருதுக்கான தேர்வில் பங்குகொண்டு தேர்வெழுதினர் . கொரோனா தொற்றுநோய் காரணமாக இரண்டு ஆண்டுகள் நடைபெறாமல் இருந்த தேர்வு திருவண்ணா மலயில் தற்போது மாநிலத்திலேயே  முதல் நிகழ்வாக திருவண்ணாமலையில் சிறப்பாக நடைபெற்ற ஆளுநர் விருதுக்கான தேர்வு குறிப்பிடத்தக்கது.மாநில முதன்மை தேர்வாளர்கள் ஜெய்சங்கர், பவானி பாய் ஆகியோர் தேர்வு நடத்தினர்  .உதவி தேர்வாளர்கள் போளூர் மாவட்ட செயலர் தட்சிணாமூர்த்தி, செங்கம் மாவட்ட செயலாளர் வெங்கடேஷ், மாவட்ட  பயிற்சி ஆணையர் கலைவாணி ,மாவட்ட அமைப்பு பயிற்சி ஆணையர் அருண்குமார், ,மாவட்ட பொருளாளர் ஆல்வின், மாவட்ட சாரண ஆணையர் சுதாகர், மாவட்ட பயிற்சி ஆணையர் ரமேஷ் குமார், மாவட்ட செயற்குழு உறுப்பினர் சரவணகுமார் , கிருஷ்ணமூர்த்தி, செங்கம் மாவட்ட அமைப்பு செயலாளர் அன்பழகன், மாவட்ட பொருளாளர் வேலாயுதம், போளூர் மாவட்ட பயிற்சியாளர் ஜமுனாராணி,  மாவட்ட உதவிச் செயலாளர் உஷா, மாவட்ட அமைப்பு ஆணையர் அமிர்தா, மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் இந்திராணி உதயா, ராமஜெயம் ,மும்தாஜ், மன்சூர், சுதா, தேர்வு முகாம் பணியை மேற்கொண்டனர். நிகழ்ச்சி ஏற்பாடுகளை திருவண்ணாமலை மண்டல ஒருங்கிணைப்பாளர் பியூலா கரோலின் செய்திருந்தார்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!