17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » பெருங்குடியில் கிறிஸ்தவ நல்லெண்ண இயக்கத்தின் 12வது ஆண்டு விழா நடைபெற்றது.

பெருங்குடியில் கிறிஸ்தவ நல்லெண்ண இயக்கத்தின் 12வது ஆண்டு விழா நடைபெற்றது.

எழுதியவர்: mohan November 28, 2021, 11:31 am

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுகா பெருங்குடியில் கிறிஸ்தவ நல்லெண்ண இயக்கத்தின் சார்பில் பன்னிரண்டாம் ஆண்டு துவக்கவிழா நடைபெற்றது.மதுரை தெற்கு மாவட்ட செயலாளர் மற்றும் திமுக மதுரை தெற்கு மாவட்ட வழக்கறிஞர் பிரிவு துணை அமைப்பாளருமான ஆஸ்டின் தலைமையில் அவனியாபுரம் அருகே காமராஜர் நகர் பகுதியில் தனியார் மண்டபத்தில் 12ம் ஆண்டு விழாவிற்கான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது..முன்னதாக பெருங்குடியில் உள்ள மாற்றுதிறனாளி மாணவர் 50 பேர்களுக்கு மதியஉணவு மற்றும் கேக் வழங்கப்பட்டது.மாநிலத் துணைத் தலைவர் மற்றும் பரவை காய்கறி சந்தை சங்கத் தலைவர் டாக்டர். இம்மானுவேல் ஜெயராஜ் மற்றும் தலைவர் போஸ் அருள்ராஜ் மற்றும் துணை செயலாளர் ஜெயபால் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டு கிறிஸ்மஸ் தினத்தில் ஏழை எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்குவது குறித்து ஆலோசனை மேற்கொண்டனர்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!