18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » தொழில்முனைவோர்களுக்கான பயிற்சி பட்டறை நடைபெற்றது.

தொழில்முனைவோர்களுக்கான பயிற்சி பட்டறை நடைபெற்றது.

எழுதியவர்: mohan November 22, 2021, 9:54 am

இந்திய தொண்டு நிறுவனங்கள் மற்றும் மனித நேய சேவைகளின் கூட்டமைப்பு நிறுவனம் (FNI), தீபம் இந்தியா அறக்கட்டளையும் இணைந்து RSமங்கலம் துரோபதி மஹாலில் தொழில்முனைவோர்களுக்கான பயிற்சி பட்டறை FNIயின் தேசிய தலைவர் முனைவர் விஜயகுமார் தலைமையில் நடைபெற்றது. இந்த தொழில் முனைவோர் பயிற்சி பட்டறையில் தீபம் இந்தியா அறக்கட்டளை தலைமை நிர்வாகி மதிவாணன் முன்னிலை வகித்தார். FNI மாநில செய்தி மற்றும் மக்கள் தொடர்பு அலுவலர் டேனியல் சக்கரவர்த்தி அனைவரையும் வரவேற்றார். FNI தேசிய செயலாளர் கனகாம்பாள், மாநில பொருளாளர் சக்திவேல் மற்றும் மாநில பொதுச்செயலாளர் ஆனந்தகுமார் ஆகியோர் தொழில் முனைவோர்களுக்கான திட்டங்கள் குறித்து சிறப்புரை ஆற்றியும் திட்டங்களுக்கான பயிற்சியும் அளித்தனர்.தொழில் முனைவோர் கூட்டத்தில் அறக்கட்டளை நிர்வாகிகள்,தன்னார்வலர்கள் மற்றும் மகளிர் சுய உதவி குழு தலைவிகள், மக்கள் பிரதிநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு சிறப்பித்தனர். மேலும் கூட்ட முடிவில் கார்த்திகா நன்றி கூறினார்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!