திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் பகுதியில் பெய்து வரும் தொடர் மழையினால் தோக்கவாடி பகுதியை சேர்ந்த துரை என்பவரது ஓட்டு வீடு மூன்று பக்கமும் உள்ள சுவர்கள் இடிந்து விழுந்து நாசமானது இதனால் துரை மற்றும் அவரது மனைவி உட்பட இரண்டு குழந்தைகள் அதிசயமாக உயிர் தப்பினர்இது சம்பந்தமாக கிராம நிர்வாக அலுவலருக்கு தகவல் கொடுத்துள்ளார் தகவல் அறிந்து வந்த கிராம நிர்வாக அலுவலர் மழையின் நிவாரணத்தொகை வாங்கித்தருவதாக கூறிவிட்டுச் சென்றுள்ளார் ஆனால் மழை நிவாரண தொகையை வைத்து ஒரு குடிசை கூட போட முடியாது என்பதால் வேறு வழியில்லாமல் அதே பகுதியில் உள்ள மாரியம்மன் கோவிலில் தங்கி இருந்து வந்துள்ளார் ஆனால் தொடர் மழையினால் தனது வீட்டின் சுவர்கள் இடிந்து விழுந்ததில் அவர் வைத்திருந்த உணவுப்பொருட்கள் முழுவதும் சேதமடைந்தது மேலும் வேறுவழியின்றி தோக்கவாடி கிராம நிர்வாக அலுவலகத்தில் தனது மனைவி மற்றும் இரு குழந்தைகளுடன் துரை தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார் தகவல் அறிந்து வந்த செங்கம் துணை வட்டாட்சியர் திருநாவுக்கரசு அவர்களிடம் சமரசம் பேசி விரைவில் பசுமை வீடு வழங்க நடவடிக்கை எடுப்பதாக கூறி துரை வீட்டை நேரில் ஆய்வு செய்தார் அப்போது துரை வீடு மழைநீரில் நினைந்து முழுவதும் சேதம் அடைந்ததால் அவருக்கு உடனடியாக பசுமை வீடு வழங்க மாவட்ட ஆட்சியர் மற்றும் குடிசை மாற்று வாரியத்தில் தகவல் கொடுக்கப்பட்டு விரைவில் நடவடிக்கை மேற்கொள்வதாக உறுதி அளித்ததன் பேரில் துரை அங்கிருந்து சென்றார் ஆனால் அரசு பசுமை வீடு வரும்வரை அவர் எங்கு தனது குடும்பத்துடன் போய் தங்குவது என தெரியாமல் கவலையோடு இருந்த வீட்டு இருக்கே சென்ற சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியது
செங்கத்தில் தொடர் மழையால் வீடு இடிந்து விழுந்த சம்பவம்; சோகத்தை ஏற்படுத்தி உளளது .
எழுதியவர்: mohan November 22, 2021, 6:25 am




You must be logged in to post a comment.