18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » மூன்று வேளாண் சட்டங்களை திரும்பபெறுவோம் அறிவிப்புஇந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் இனிப்புகள் வழங்கி கொண்டாட்டம்.

மூன்று வேளாண் சட்டங்களை திரும்பபெறுவோம் அறிவிப்புஇந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் இனிப்புகள் வழங்கி கொண்டாட்டம்.

எழுதியவர்: mohan November 20, 2021, 12:43 pm

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் தாலுக்கா கமிட்டி சார்பில் இறையூரில் மூன்று வேளாண் சட்டங்களை திரும்பபெறுவோம் பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் அறிவித்ததை வரவேற்று தமிழ்நாடு விவசாய சங்கம் மற்றும் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் பட்டாசு வெடித்து, இனிப்புகள் பொதுமக்களுக்கு வழங்கி கொண்டாடப்பட்டது.மத்திய அரசு கொண்டு வந்த மூன்று வேளாண் சட்டங்களை ரத்து செய்யக் கோரி டெல்லி எல்லையில் விவசாயிகள் ஏழு மாதங்களுக்கும் மேலாகத் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.விவசாயிகளுடன் மத்திய அரசு 10 முறைகளுக்கும் மேல் பேச்சுவார்த்தை நடத்தியது. எனினும் இருதரப்புக்கும் இடையே உடன்பாடு ஏற்படவில்லை. விவசாயிகள் கோரும் திருத்தங்களை மேற்கொள்ள தயாராக இருப்பதாக மத்திய அரசு கூறுகிறது. வேளாண் சட்டங்களை ரத்து செய்ய முடியாது அறிவித்த நிலையில் பஞ்சாப் தேர்தலையொட்டி 3 வேளாண் சட்டங்களை திரும்பப் பெறுவோம் பாரதப்பிரதமர் அறிவிப்பை அடுத்து அனைத்து தரப்பு மக்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மேலும், போராட்டத்தில் உயிரை தியாகம் செய்த விவசாயிகளுக்கு செலுத்தினார். நிகழ்வில், சி ஐ டி யு ஆட்டோ சங்க மாவட்ட பொருளாளர், முபாரக், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் தாலுக்கா செயலாளர சி.எம். பிரகாஷ் மற்றும் சங்கர்,வேலு, முருகையன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!