17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » போக்குவரத்து துறையில் பழைய பேருந்துகள் பயன்படுத்துவதால் சிரமம் ஏற்பட்டுள்ளது., புதிய பேருந்துகள் வாங்க அரசு ஏற்பாடு அமைச்சர் பேட்டி.

போக்குவரத்து துறையில் பழைய பேருந்துகள் பயன்படுத்துவதால் சிரமம் ஏற்பட்டுள்ளது., புதிய பேருந்துகள் வாங்க அரசு ஏற்பாடு அமைச்சர் பேட்டி.

எழுதியவர்: mohan November 20, 2021, 12:29 pm

 ராமநாதபுரம் மாவட்டத்தில் ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொள்ள சென்னையிலிருந்து மதுரை விமான நிலையம் வந்தடைந்த தமிழக போக்குவரத்து துறை ராஜகண்ணப்பன் செய்தியாளர்களை சந்தித்துக் கூறுகையில்.போக்குவரத்து துறையில் கடன் சுமை குறித்த கேள்விக்கு.?போக்குவரத்து துறையில் சீர்படுத்தும் பணி நடைபெற்று வருவதாகவும்., தமிழக முதல்வரின் ஆலோசனைப்படி கடந்த ஆறு மாத காலமாக போக்குவரத்து துறையை ஒழுங்குபடுத்தி நல்லமுறையில் செயல்படுகிறது. போக்குவரத்து ஆணையரின் தலைமையில் நிர்வாகம் நல்லமுறையில் செயல்பட்டு வருகிறது.மழை வெள்ளம் பாதிப்பு ஏற்பட்ட இடங்களில் பேருந்துகள் பாதிப்பு குறித்த கேள்விக்கு.?அது குறித்து ஆலோசனை கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக ராமநாதபுரம் செல்வதாகவும் தமிழக அரசு துரிதமாக செயல்படுவதாக தெரிவித்தார். சென்னையில் வெள்ள பாதிப்பில் பேருந்துகள் பாதிப்படையவில்லை., தமிழக அரசு சிறப்பாக செயல்படுகிறது.. எந்த வெள்ளம் வந்தாலும் எதிர் கொள்ள அரசு தயாராக உள்ளது.பேருந்துகள் நிலை குறித்து பேருந்து ஓட்டுனர்கள் வெளியிட்ட வீடியோ குறித்த கேள்விக்கு.?புதிய பேருந்துகள் வாங்குவதற்கு ஏற்பாடுகள் நடைபெறுவதாகவும்., பேருந்து பழுது பார்க்க நிதி உதவி கேட்டுள்ளதாகவும் பழைய பேருந்துகள் மிக விரைவில் சரி செய்யப்படும். ஏற்கனவே., உள்ள பழைய பேருந்துகள் பயன்படுத்துவதால் சிரமும் ஏற்பட்டுள்ளதாகவும்., இன்னும் இரண்டு மூன்று மாதத்திற்குள் போக்குவரத்திற்கு பேருந்துகளை சரி செய்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வருவோம் என அமைச்சர்ராஜகண்ணப்பன் தெரிவித்தார்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!