17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » ஜவுளி கடையில் தீ விபத்து.

ஜவுளி கடையில் தீ விபத்து.

எழுதியவர்: mohan November 20, 2021, 12:23 pm

மதுரை மாவட்டம் கீழமாசி வீதியில் செயல்பட்டு வரும் பகவதி டெக்ஸ்டைல்ஸ் ஜவுளிக்கடை இரண்டு தளங்களைக் கொண்ட இந்த கடையில் தரைதளத்தில் ஜவுளிக்கடையில் முதல் தளத்தில் குடோன் இரண்டாவது தளத்தில் தொழிலாளர்கள் தங்கி உள்ளனர் இந்த நிலையில் இன்று அதிகாலை தரைத்தளத்தில் இருந்த இன்வெர்ட்டர் இல் இருந்து மின் கசிவு ஏற்பட்டுள்ளது அதிலிருந்து கிளம்பிய தீப்பொறி ஆனது அடுக்கி வைக்கப்பட்டிருந்த துணியில் பட்டுள்ளது இதனால் கரும் புகை மூட்டம் வந்துள்ளது இதனைக்கண்ட மேலே தங்கியிருந்த தொழிலாளர்கள் கீழே வருவதற்கு முயற்சி செய்துள்ளார்கள் எனினும் புகை மூட்டம் அதிகமாக இருந்ததாலும் தீயில் வேகம் அதிகரிக்க தொடங்கிய காரணத்தினால் இவர்களால் கீழே வர முடியவில்லை உடனடியாக தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்து சம்பவ இடத்துக்கு விரைந்த தீயணைப்பு நிலைய அலுவலர் வெங்கடேசன் தலைமையிலான தீயணைப்பு மற்றும் பேரிடர் மீட்பு குழுவினர் கீழே மிகப்பெரிய ஷட்டர் கதவுகள் இருந்ததால் முதல் தளத்திற்கு சென்று துளையிட்டு தரை தளத்திற்கு வந்து தீயை அணைத்தனர் துரிதமாக செயல்பட்டு தீயை அணைத்ததால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது தீ விபத்து சம்பவம் குறித்து மதுரை விளக்குத்தூண் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!