17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » தென்காசி மாவட்டத்தில் காணாமல் போன செல்போன்கள் மீட்பு; உரியவர்களிடம் மாவட்ட எஸ்.பி வழங்கினார்..

தென்காசி மாவட்டத்தில் காணாமல் போன செல்போன்கள் மீட்பு; உரியவர்களிடம் மாவட்ட எஸ்.பி வழங்கினார்..

எழுதியவர்: mohan November 20, 2021, 12:06 pm

தென்காசி மாவட்டத்தில் ரூ.7 லட்சம் மதிப்புள்ள 60 செல்போன்கள் மீட்டு உரிய நபர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. மாவட்ட எஸ்.பி. உரிய நபர்களிடம் வழங்கினார்.தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கிருஷ்ணராஜ் IPS உத்தரவுப்படி தென்காசி மாவட்டம் முழுவதும் செல்போன்கள் காணாமல் போனதாக தென்காசி மாவட்ட சைபர் கிரைம் காவல் நிலையத்தில் வந்த புகாரின் பேரில் கூடுதல் கண்காணிப்பாளர் சுவாமிநாதன் தலைமையில் காவல் ஆய்வாளர் ஜோஸ்லின் அருள்செல்வி, சார்பு ஆய்வாளர்கள் சிவசங்கரி, தொழில்நுட்ப பிரிவு சார்பு ஆய்வாளர் செண்பகப் பிரியா மற்றும் காவலர்களின் துரித நடவடிக்கையால் தொலைந்த மற்றும் தவறவிட்ட ரூபாய் 7 லட்சம் மதிப்பிலான 60 செல்போன்கள் மீட்கப்பட்டது.மேற்படி மீட்கப்பட்ட செல்போன்கள் அதன் உரிமையாளர்களிடம் 19/11/2021 தென்காசி கொடிக்குறிச்சியில் அமைந்துள்ள நல்லமணி யாதவா கல்லூரியில் வைத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஒப்படைத்தார். மேலும் செல்போன்களை தவறவிட்ட நபர்களுக்கும் கல்லூரி மாணவ மாணவிகளுக்கும் சைபர் கிரைம் குற்றங்கள் பற்றிய விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் வழங்கி சைபர் கிரைம் குற்றங்கள் குறித்து விழிப்புணர்வையும் ஏற்படுத்தினார். பின்னர் சிறப்பாக பணிபுரிந்து செல்போன்களை மீட்டு கொடுத்த காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்களுக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தனது வாழ்த்துக்களையும் பாராட்டுகளையும் தெரிவித்தார்.மேலும் செல்போன்களை பெற்றுக் கொண்ட நபர்கள் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களுக்கும் மற்றும் காவல் துறையினருக்கும் தங்களின் வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்தனர்.

செய்தியாளர் அபுபக்கர்சித்திக்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!