17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » உசிலம்பட்டியில் ஸ்கூட்டியில் வைத்திருந்த ரூ2.50 லட்சம் திருட்டு.சிசிடிவி காட்சி வெளியீடு.

உசிலம்பட்டியில் ஸ்கூட்டியில் வைத்திருந்த ரூ2.50 லட்சம் திருட்டு.சிசிடிவி காட்சி வெளியீடு.

எழுதியவர்: mohan November 19, 2021, 3:02 pm

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே மலைப்பட்டியைச் சேர்ந்தவர் செல்வராஜ் (54). இவருடைய வீடுகட்டும் பணிக்காக தன்னுடைய மனைவி நகையை உசிலம்பட்டி பேரையூர் ரோட்டிலுள்ள தனியார் வங்கியில் அடகு வைத்து ரூ2.74 லட்சம் பணம் பெற்றுள்ளார்.இதில் ரூ2.50 லட்சத்தை தன்னுடைய ஸ்கூட்டி வண்டியில் வைத்து விட்டு ரூ24 ஆயிரத்தை பாக்கெட்டில் வைத்துக் கொண்டு அருகிலுள்ள கவணம்பட்டி ரோட்டில் ஒரு கடையின் ஸ்கூட்டியை நிறுத்தி விட்டு மளிகைச்சாமான்கள் வாங்கியுள்ளார்.இதனை வங்கியின் வெளியிலிருந்து ஆரம்பத்திலிருந்தே மோட்டார் சைக்கிளில் கவனித்துக் கொண்டிருந்த 3 பேர் செல்வராஜ் வண்டியை பின் தொடர்ந்துள்ளனர். செல்வராஜ் ஸ்கூட்டியை நிறுத்தி கi;டயில் சமான் வாங்கிக் கொண்டிருப்பதை பார்த்ததும் ஒருவர் மட்டும் ஓடிச்சென்று செல்வராஜ் வண்டியிலிருந்த ரூ2.50 லட்;சத்தை திருடி விட்டு மோட்டார் சைக்கிளில் வந்தவர்களிடம் பணத்தை கொடுத்து ஒடும் சிசிடிவி தற்போது வெளியாகியுள்ளது.இவர்களின் படத்தை வெளியிட்டு தற்போது உசிலம்பட்டி நகர் காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்.

உசிலை சிந்தனியா

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!