17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » கீழக்கரை செய்திகள் » செய்திகள் » மாவட்ட செய்திகள் » கீழக்கரை நகராட்சி சுகாதாரத்துறை விழிக்குமா?? பொதுமக்களை பாதுகாக்குமா?? தொடரும் உணவகங்களின் அலட்சியம்..

கீழக்கரை நகராட்சி சுகாதாரத்துறை விழிக்குமா?? பொதுமக்களை பாதுகாக்குமா?? தொடரும் உணவகங்களின் அலட்சியம்..

எழுதியவர்: ஆசிரியர் November 19, 2021, 8:03 am

கீழக்கரையில் நூற்றுக்கும் மேற்பட்ட அனுமதி பெற்ற மற்றும் அனுமதி பெறாத உணவகங்கள் மற்றும் உணவு சார்ந்த பொருட்கள் விற்று வருகின்றனர்.  ஆனால் அனைத்து நிறுவனங்களும் முறையான சுகாதார விதிமுறைகளை பின்பற்றுகிறார்களா அல்லது சுகாதாரத்துறை தொடர்ச்சியான ஆய்வு மேற்கொள்கிறதா என்பது என்றுமே கேள்விகுறிதான்.  காரணம் கீழக்கரையில் அடிக்கடி சுகாதாரமில்லாமல் விற்பனை செய்யப்படுகிறது என்ற குற்றச்சாட்டு எழுந்த வண்ணம் உள்ளது.

சமீபத்தில் கீழக்கரை வடக்குத் தெரு ரைஹானா என்ற பெண்மணி பிட்சா பேக்கரி எனும் நிறுவனத்தில்  வாங்கிய உணவு பண்டத்தில் நூல் இருந்ததை அறியாமல் அவரின் மகள் உண்டதில் வாந்தி மற்றும் வயிற்று வலிக்கும் ஆளாகியுள்ளர். இது சம்பந்தமாக அப்பெண்மணி காவல்துறையிலும் புகார் அளித்துள்ளனர்.  ஆனால் இதை ஏதோ ஒரு சம்பவமாக நினைத்து கடந்து விடாமல் அரசு அதிகாரிகள் கீழக்கரையில் உள்ள அனைத்து உணவகங்களையும் ஆய்வு செய்து பொதுமக்களின் சுகாதாரத்திற்கு உத்திரவாதம் வழங்க வேண்டும்.  சுகாதாரத்தை அலட்சியம் செய்யும் நிறுவனங்கள் மீது அரசு துறை கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!