17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » திருப்பரங்குன்றம் மலை உச்சியில் கார்த்திகை தீபம் ஏற்ற கோரி இந்து முன்னணி 16 கால் மண்டபத்தில் ஆர்ப்பாட்டம்.

திருப்பரங்குன்றம் மலை உச்சியில் கார்த்திகை தீபம் ஏற்ற கோரி இந்து முன்னணி 16 கால் மண்டபத்தில் ஆர்ப்பாட்டம்.

எழுதியவர்: mohan November 19, 2021, 6:49 am

தீபத்திருப்பரங்குன்றம் மலைமேல் கார்த்திகைதடையை மீறி ஏற்றச் சென்ற இந்து முன்னணி தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியம் உள்பட 200 பேர் கைதுமதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுகா தமிழ் கடவுள் முருகனின் ஆறுபடை வீடுகளில் முதல்படை வீடான அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோவில் மலை உச்சியிலுள்ள தீப தூணில் ஆண்டுதோறும் கார்த்திகை தீபம் ஏற்றப்படுவது வழக்கம் .கடந்த சில வருடங்களாக கார்த்திகை தீபம் ஏற்றுவது தொடர்பாக சர்ச்சைகள் ஏற்பட்டதை தொடர்ந்து திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள மோட்ச தீப தூணில் கார்த்திகை தீபம் ஏற்றப்படுகிறது.இதனை கண்டித்து இந்து முன்னணி மற்றும் பல்வேறு இந்து அமைப்புகள் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர்.மலை உச்சியில் உள்ள கார்த்திகை தீபத் தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற வலியுறுத்தி வருகின்றனர் .உயர் நீதிமன்ற வழிகாட்டுதலின்படி இந்து சமய அறநிலையத்துறை நடவடிக்கை எடுத்து மலை உச்சியில் உள்ள கார்த்திகை தீப தூணில் தீபம் ஏற்ற கோரி இந்து முன்னணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது .இதில் இந்து முன்னனி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியம். தலைமை வகித்தார் – 200 பெண்கள் உள்ளிட்ட 600க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.கார்திகை தீபம் ஏற்றுவது தொடர்பாக அசம்பாவிதம் ஏற்படாமல் தடுக்க மதுரை மாநகர் காவல் துணைஆணையர் தங்கதுரை, திருப்பரங்குன்றம்காவல் உதவி ஆணையர் ரவி தலைமையில் ஏராளமான போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.திருப்பரங்குன்றம் மலைமேல் கார்த்திகை தீபத்தைதடையை மீறி ஏற்றச் சென்ற இந்துமுன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணி உள்பட 200 பேர் கைது..

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!