17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » தென்காசி மாவட்ட காவல்துறை சார்பில் போக்சோ சட்டம் குறித்து பள்ளி கல்லூரிகளில் விழிப்புணர்வு..

தென்காசி மாவட்ட காவல்துறை சார்பில் போக்சோ சட்டம் குறித்து பள்ளி கல்லூரிகளில் விழிப்புணர்வு..

எழுதியவர்: mohan November 18, 2021, 6:44 pm

தென்காசி மாவட்ட காவல்துறை சார்பில் பெண் குழந்தைகள் பாதுகாப்பு மற்றும் போக்சோ சட்டம் குறித்து பள்ளி கல்லூரிகளில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கிருஷ்ணராஜ் IPS உத்தரவின் பேரில் மாவட்டம் முழுவதும் காவல்துறையினர் பள்ளி கல்லூரிகளில் மாணவ, மாணவிகளிடம் பெண் குழந்தைகள் பாதுகாப்பு மற்றும் போக்சோ சட்டம் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர். மாணவ மாணவிகள் தங்களுக்கு பள்ளி கல்லூரிகளிலோ அல்லது வெளியிலோ ஏதேனும் பிரச்சனை ஏற்பட்டால் பெற்றோர்களிடமோ அல்லது ஆசிரியர்களிடமோ உடனே தெரிவிக்க வேண்டும் எனவும், மாணவிகள் அனைவரும் தங்களின் செல்போனில் காவலன் செயலியை பதிவிறக்கம் செய்து வைத்துக் கொள்ள வேண்டும் என்றும், ஆபத்து காலங்களில் காவல் துறையினரின் உதவியை இதன் மூலம் எளிதில் பெற முடியும். மேலும் ஏதேனும் பிரச்சனை ஏற்பட்டால் உடனடியாக 1098 என்ற தொடர்பு எண்ணை தொடர்பு கொள்ளலாம்.18 வயதிற்கு கீழ் உள்ள குழந்தைகளிடம் பாலியல் ரீதியான செயல்களில் ஈடுபடும் நபர்கள் மீது போக்சோ சட்டத்தில் கீழ் வழக்குப் பதிவு செய்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர்.

செய்தியாளர் அபுபக்கர்சித்திக்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!