17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » குப்பை கழிவுகளை சுத்தம் செய்ய பொதுமக்கள் கோரிக்கை

குப்பை கழிவுகளை சுத்தம் செய்ய பொதுமக்கள் கோரிக்கை

எழுதியவர்: mohan November 18, 2021, 6:41 pm

ராமநாதபுரம் மாவட்டம் ஆர்எஸ் மங்கலம், பார்க் தெரு பள்ளிவாசல் பின்புறம் உள்ள வாய்க்கால் தூர்வாரப்பட்டு அதில் உள்ள கழிவுகள் வாய்க்காலின் ஓரத்திலேயே கொட்டப்பட்டுள்ளது.தூர்வாரப்பட்டு ஒரு மாதத்திற்கு மேலாகியும் குப்பை கழிவுகள் அல்லாமல் வாய்க்கால் அருகிலேயே குவிந்து கிடக்கிறது.மழை நேரங்களில் குப்பை கழிவுகளோடு மழைநீரும் சேர்ந்து அப்பகுதியில் நடக்க முடியாத சூழ்நிலை உள்ளது.இதனை பேரூராட்சி அலுவலகத்திற்கு தெரியப்படுத்தியும் எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை.எனவே தூர்வாரப்பட்டு கொட்டப்பட்ட கழிவுகளை உடனடியாக அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!