18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » திருப்பரங்குன்றம் அருகே இடி தாக்கி கட்டடத்தொழிலாளி, மற்றும் பசுமாடு பலி.

திருப்பரங்குன்றம் அருகே இடி தாக்கி கட்டடத்தொழிலாளி, மற்றும் பசுமாடு பலி.

எழுதியவர்: mohan November 18, 2021, 6:14 am

மதுரை மாவட்டம்திருப்பரங்குன்றம், தாலுகா பெருங்குடி அருகே வளையபட்டி கிராமத்தில் மாடு மேய்த்துக் கொண்டிருந்த கட்டடத்தொழிலாளி மீது இடி விழுந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது குறித்து பெருங்குடி போலீஸ விசாரணைபெருங்குடியை அடுத்த வளையபட்டியைச் சேர்ந்த ராஜூ என்பவரது மகன் பாலு(31). கட்டடத்தொழிலாளி. இவர் வீட்டின் அருகே பசுமாட்டிற்கு வைக்கோல் வைத்துக்கொண்டிருந்தபோது திடீரென இடிதாக்கியதில் பாலுவும், அவரது மாடும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த பெருங்குடி போலீஸôர் பாலுவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்து குறித்து பெருங்குடி போலீஸôர் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!