18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » 25 ஆண்டுகளுக்கு பின் நிரம்பி வழிகிறது காரப்பட்டு ஏரி மகிழ்ச்சியாக மலர்தூவி மரியாதை செய்தனர்.

25 ஆண்டுகளுக்கு பின் நிரம்பி வழிகிறது காரப்பட்டு ஏரி மகிழ்ச்சியாக மலர்தூவி மரியாதை செய்தனர்.

எழுதியவர்: mohan November 18, 2021, 6:00 am

திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் அடுத்த புதுப்பாளையம் அருகே காரப்பட்டு கிராமத்தில் 25 ஆண்டுகளுக்கு பின் நிரம்பி வழிகிறது ஏரி இதனால் அப்பகுதி பொதுமக்களும் விவசாயிகளும் பெரும் மகிழ்ச்சி அடைகிறார்கள் மேலும் தொடர் கன மழை காரணமாக ஏரி நிரம்பியது .மேலும் காரப்பட்டு ஊராட்ச்சிக்கு உட்பட்ட பெரிய ஏரியாக அமைந்துள்ளது இந்த ஏரி நிரம்பியதற்க்கு காரப்பட்டு ஊராட்சி மன்ற தலைவர் ஜெயந்தி சீனிவாசன் தலைமையில் புதுப்பாளையம் ஒன்றிய குழு உறுப்பினர் ரமேஷ் முன்னிலையில் சிறப்பு பூஜைகள் செய்து பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கியும், பட்டாசு வெடித்தும் மிக விமரிசையான முறையில் கொண்டாடினார்கள் பின்னர் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கினார்கள் மேலும் இந்நிகழ்ச்சியில் காரப்பட்டு கிராம ஊர் முக்கிய பிரமுகர்களும் , பொதுமக்களும் , விவசாயிகளும் பெரும் திரளாக கலந்து கொண்டனார், மேலும் இந்நிகழ்வில் காரப்பட்டு ஊராட்சி மன்ற உறுப்பினர்களும், நிர்வாகிகளும் , ஊழியர்களும் பங்கேற்றனர் மேலும் இந்நிகழ்ச்சியில் காரப்பட்டு கிராமத்தில் உள்ள அருள்மிகு ஸ்ரீ மாரியம்மன் திருகோவிலில் இருந்து சிறப்பு பூஜை செய்து எடுத்துவரப்பட்ட அபிஷேக பொருட்களையும், புது புடவைகளும் ஏரியின் மதகு பகுதியில் விடப்பட்டது இறுதியாக பொதுமக்கள் அனைவரும் ஒன்றுகூடி மேளதாளத்துடன் மகிழ்ச்சியாக கொண்டாடினார்கள்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!