18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » கீழக்கரை செய்திகள் » செய்திகள் » கீழக்கரை SDPI கட்சி சார்பாக நகராட்சி ஆணையரிடம் கோரிக்கை..

கீழக்கரை SDPI கட்சி சார்பாக நகராட்சி ஆணையரிடம் கோரிக்கை..

எழுதியவர்: ஆசிரியர் November 17, 2021, 6:26 pm

கீழக்கரை நகர் எஸ்டிபிஐ கட்சியின் கிழக்கு மற்றும் மேற்கு நிர்வாகிகள் தலைமையில் நகராட்சி ஆணையர் அவர்களையும் சுகாதாரத் துறை ஆய்வாளர் பூபதி ஆகியோரை  சந்தித்து  கீழக்கரையில் சுற்றித் திரியும் அனைத்து தெரு நாய்களையும் போர்க்கால அடிப்படையில் உடனடியாக பிடித்து அப்புறப்படுத்த வேண்டும் என்றும்,  இரவில் அதிகமாக நடமாடக் கூடிய மாடுகளின் உரிமையாளர்களை அழைத்து அபராதம் விதிக்க வேண்டும் என்றும் மனுக்கள் கொடுக்கப்பட்டது.

அதே போல் கீழக்கரை முழுவதும் உள்ள கால்வாய்களில் உடைந்த மூடிகள் அனைத்தையும் சரி செய்ய வேண்டும் என்றும் ஊர் முழுவதும் கிருமி நாசினி தெளிக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைக்கப்பட்டது. இதை கேட்டறிந்த நகராட்சி ஆணையாளர் மற்றும் சுகாதாரத்துறை ஆய்வாளர் இருவரும் உரிய முறையில் அனைத்து விதமான நடவடிக்கையும் எடுக்கப்படும் என்று உறுதி அளித்தார்கள்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!